IPL 2021 கனத்த இதயத்துடன் தனது “தளபதி”யை ஓரங்கட்டிய “தல”..! டெல்லி அணியில் ஒரேயொரு மாற்றம்.. டாஸ் ரிப்போர்ட்

Published : Oct 04, 2021, 07:27 PM ISTUpdated : Oct 04, 2021, 07:30 PM IST
IPL 2021 கனத்த இதயத்துடன் தனது “தளபதி”யை ஓரங்கட்டிய “தல”..! டெல்லி அணியில் ஒரேயொரு மாற்றம்.. டாஸ் ரிப்போர்ட்

சுருக்கம்

சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடள்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.  

ஐபிஎல் 14வது சீசனின் இன்றைய போட்டியில், புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களில் இருக்கும் சிஎஸ்கே மற்றும் டெல்லி கேபிடள்ஸ் அணிகள் மோதுகின்றன. 

துபாயில் நடக்கும் இந்த போட்டி, புள்ளி பட்டியலில் எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தாது. இந்த போட்டிக்கான சிஎஸ்கே அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சிஎஸ்கே அணியின் செல்லப்பிள்ளையான சீனியர் வீரர் சுரேஷ் ரெய்னா படுமோசமான ஃபார்மில் இருப்பதால் கனத்த இதயத்துடன் அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க - அது கண்டிப்பா அவுட்டு தான்..! சர்ச்சை சம்பவம் குறித்து பேசிய ஆஷிஸ் நெஹ்ரா

இந்த சீசனில் 11 இன்னிங்ஸ்களில் 160 ரன்கள் மட்டுமே அடித்துள்ள நிலையில், அவர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ராபின் உத்தப்பா சேர்க்கப்பட்டுள்ளார். பொதுவாக அணி காம்பினேஷனில் மாற்றம் செய்ய விரும்பாத சிஎஸ்கே அணி, வேறு வழியில்லாமல் ரெய்னாவை நீக்கிவிட்டு உத்தப்பாவை சேர்த்துள்ளது. மேலும், சாம் கரன் நீக்கப்பட்டு சீனியர் ஆல்ரவுண்டர் பிராவோ நீக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க - மெண்டல் டார்ச்சர்னா என்னனு முதல்ல தெளிவா சொல்லுப்பா முகமது ஆமீர்..! வக்கார் யூனிஸ் செம காட்டம்

சிஎஸ்கே அணி:

ருதுராஜ் கெய்க்வாட், டுப்ளெசிஸ், மொயின் அலி, ராபின் உத்தப்பா, ராயுடு, தோனி(கேப்டன், விக்கெட் கீப்பர்), ஜடேஜா, ட்வைன் பிராவோ, ஷர்துல் தாகூர், தீபக் சாஹர், ஹேசில்வுட்.

டெல்லி கேபிடள்ஸ் அணியில் ஸ்மித் நீக்கப்பட்டு உள்நாட்டு இளம் வீரரான ரிபால் படேல் சேர்க்கப்பட்டுள்ளார்.

டெல்லி கேபிடள்ஸ் அணி:

பிரித்வி ஷா, ஷிகர் தவான், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட்(கேப்டன், விக்கெட் கீப்பர்), ரிபால் படேல், ஹெட்மயர், அக்ஸர் படேல், அஷ்வின், ரபாடா, நோர்க்யா, ஆவேஷ் கான்.
 

PREV
click me!

Recommended Stories

CSK vs KKR: மைதானத்தில் சோகம்! கருப்புப் பட்டை அணிந்து விளையாடிய வீரர்கள் - பின்னணி என்ன?
Vaibhav Suryavanshi: சச்சின் சாதனையை முறியடிப்பாரா இந்த 15 வயது புயல்? வைபவ் புதிய வரலாறு!