IPL 2023: நீயா நானா போட்டியில் டாப் 2 அணிகளான RR - LSG பலப்பரீட்சை.! இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

By karthikeyan V  |  First Published Apr 18, 2023, 10:47 PM IST

ஐபிஎல் 16வது சீசன் புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களில் இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் மோதும் போட்டியில் களமிறங்கும் இந்த இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
 


ஐபிஎல் 16வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ், சிஎஸ்கே, குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் நன்றாக ஆடி வெற்றிகளை பெற்றுவருகின்றன.

சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தான் அபாரமாக ஆடி வெற்றிகளை குவித்து புள்ளி பட்டியலில் ஆதிக்கம் செலுத்துகிறது. இதுவரை ஆடிய 5 போட்டிகளில் 4 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடம் வகிக்கிறது. 

Latest Videos

IPL 2023: ஐபிஎல் வரலாற்றில் 4வது பேட்ஸ்மேன்..! புதிய மைல்கல்லை எட்டி ரோஹித் சர்மா சாதனை

லக்னோ அணி 5 போட்டிகளில் 3 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் 2ம் இடத்தில் உள்ளது. புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களில் இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் நாளைய போட்டியில் மோதுகின்றன. இந்த போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆடும் லெவன் மிகச்சிறப்பாக செட் ஆகிவிட்டதால் அந்த அணியின் காம்பினேஷனில் எந்த மாற்றமும் செய்யவேண்டிய அவசியமில்லை. 

உத்தேச ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:

ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (கேப்டன்), ரியான் பராக், ஷிம்ரான் ஹெட்மயர், த்ருவ் ஜோரெல், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரெண்ட் போல்ட், ஆடம் ஸாம்பா, சந்தீப் ஷர்மா, யுஸ்வேந்திர சாஹல்.

IPL 2023: மற்ற அணிகள் எல்லாம் வீரர்களை தேடுகின்றன.. தோனி மட்டும் தான் வீரர்களை உருவாக்குகிறார்..!

உத்தேச லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி:

கேஎல் ராகுல் (கேப்டன்), கைல் மேயர்ஸ், தீபக் ஹூடா, மார்கஸ் ஸ்டோய்னிஸ், க்ருணல் பாண்டியா, நிகோலஸ் பூரன், ஆயுஷ் பதோனி, ஆவேஷ் கான், யுத்விர் சிங் சராக், மார்க் உட், ரவி பிஷ்னோய்.

click me!