SL vs IRE: 4 இலங்கை வீரர்கள் அபார சதம்.. முதல் டெஸ்ட்டில் அயர்லாந்துக்கு எதிராக இலங்கை இன்னிங்ஸ் வெற்றி

By karthikeyan V  |  First Published Apr 18, 2023, 10:00 PM IST

அயர்லாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
 


அயர்லாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 

இலங்கை அணி:

Latest Videos

திமுத் கருணரத்னே(கேப்டன்), நிஷான் மதுஷ்கா, குசல் மெண்டிஸ், ஆஞ்சலோ மேத்யூஸ், தினேஷ் சண்டிமால், தனஞ்செயா டி சில்வா, சதீரா சமரவிக்ரமா, பிரபாத் ஜெயசூரியா, ரமேஷ் மெண்டிஸ், அசிதா ஃபெர்னாண்டோ, விஷ்வா ஃபெர்னாண்டோ.

முதலில் பேட்டிங்  ஆடிய இலங்கை அணியின் கேப்டனும் தொடக்க வீரருமான திமுத் கருணரத்னே மற்றும் குசல் மெண்டிஸ் ஆகிய இருவரும் இணைந்து அபாரமாக பேட்டிங் ஆடி சதமடித்தனர். தொடக்க வீரர் மதுஷ்கா 29 ரன்களுக்கு ஆட்டமிழக்க, 2வது விக்கெட்டுக்கு கருணரத்னே - மெண்டிஸ் இணைந்து 281 ரன்களை குவித்தனர். குசல் மெண்டிஸ் 140 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இரட்டை சதத்தை நெருங்கிய கருணரத்னே 179 ரன்களுக்கு ஆட்டமிழந்து இரட்டை சதத்தை தவறவிட்டார்.

IPL 2023: ஐபிஎல் வரலாற்றில் 4வது பேட்ஸ்மேன்..! புதிய மைல்கல்லை எட்டி ரோஹித் சர்மா சாதனை

அதன்பின்னர் தினேஷ் சண்டிமால் மற்றும் சமரவிக்ரமா ஆகிய இருவரும் சதமடித்தனர். சண்டிமால் 102 ரன்களும், சமரவிக்ரமா 104 ரன்களும் குவிக்க, முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 591 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது.

அதன்பின்னர் பேட்டிங் ஆடிய அயர்லாந்து அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 143 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஃபாலோ ஆன் பெற்று 2வது இன்னிங்ஸை ஆடிய அயர்லாந்து, 168 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி சார்பில் அபாரமாக பந்துவீசிய பிரபாத் ஜெயசூரியா  அதிகபட்சமாக 7 விக்கெட்டுகளையும், 2வது இன்னிங்ஸில் ரமேஷ் மெண்டிஸ் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

IPL 2023: மற்ற அணிகள் எல்லாம் வீரர்களை தேடுகின்றன.. தோனி மட்டும் தான் வீரர்களை உருவாக்குகிறார்..!

பேட்டிங், பவுலிங் இரண்டிலும் அசத்திய இலங்கை அணி முதல் டெஸ்ட்டில் இன்னிங்ஸ் மற்றும் 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
 

click me!