IPL 2021 #RRvsCSK இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

Published : Oct 01, 2021, 09:51 PM ISTUpdated : Oct 01, 2021, 09:53 PM IST
IPL 2021 #RRvsCSK இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

சுருக்கம்

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு இடையேயான போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.  

ஐபிஎல் 14வது சீசனில் முதல் அணியாக சிஎஸ்கே பிளே ஆஃபிற்கு தகுதிபெற்றுவிட்டது. டெல்லி கேபிடள்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகளும் பிளே ஆஃபிற்கு முன்னேறிவிடும். ஆனால் கேகேஆர், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய 4 அணிகளுக்கும் இடையே, 4வது அணியாக பிளே ஆஃபிற்கு முன்னேற கடும் போட்டி நிலவுகிறது.

அந்தவகையில், 8 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 7ம் இடத்தில் இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் பிளே ஆஃப் வாய்ப்பு உள்ளது. பிளே ஆஃபிற்கு முன்னேறும் வாய்ப்பை தக்கவைக்க கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் ராஜஸ்தான் அணி, அபுதாபியில் நடக்கும் நாளைய போட்டியில் சிஎஸ்கேவை எதிர்கொள்கிறது.

இந்த போட்டியில் களமிறங்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உத்தேச ஆடும் லெவன்:

எவின் லூயிஸ், ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன்(கேப்டன், விக்கெட் கீப்பர்), லியாம் லிவிங்ஸ்டோன், மஹிபால் லோம்ரார், ரியான் பராக், ராகுல் டெவாட்டியா, கிறிஸ் மோரிஸ், கார்த்திக் தியாகி, சேத்தன் சக்காரியா, முஸ்தாஃபிசுர் ரஹ்மான்.

சிஎஸ்கே அணியில் எந்த மாற்றமும் செய்யப்படுவதற்கான அவசியமும் இல்லை; வாய்ப்பும் இல்லை.

உத்தேச சிஎஸ்கே அணி:

ருதுராஜ் கெய்க்வாட், டுப்ளெசிஸ், மொயின் அலி, ரெய்னா, ராயுடு, தோனி(கேப்டன், விக்கெட் கீப்பர்), ஜடேஜா, பிராவோ, ஷர்துல் தாகூர், தீபக் சாஹர், ஹேசில்வுட்.
 

PREV
click me!

Recommended Stories

ரோகித், விராட் கோலி ரசிகர்களே ரெடியா? அடுத்த மேட்ச் எப்போது? லைவ் உண்டா?
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி பிளேயிங் லெவன்.. சஞ்சு சாஞ்சன் இடத்துக்கு சிக்கல்.. இதுதான் காரணம்!