IPL 2021 #MIvsDC புள்ளி பட்டியலில் தாக்கத்தை ஏற்படுத்தும் முக்கியமான போட்டி..! இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

By karthikeyan VFirst Published Oct 1, 2021, 9:30 PM IST
Highlights

மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடள்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
 

ஐபிஎல் 14வது சீசனில் முதல் அணியாக சிஎஸ்கே பிளே ஆஃபிற்கு தகுதிபெற்றுவிட்டது. டெல்லி கேபிடள்ஸ் அணியும் கிட்டத்தட்ட பிளே ஆஃபிற்கு முன்னேறுவது உறுதியாகிவிட்டது. ஆர்சிபி அணியும் பிளே ஆஃபிற்கு முன்னேறிவிடும். 4வது அணியாக பிளே ஆஃபிற்கு செல்ல, மும்பை இந்தியன்ஸ் மற்றும் கேகேஆர் அணிகளுக்கு இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது.

புள்ளி பட்டியலில் சுவாரஸ்யமான கட்டத்தில் இருக்கும் இந்த சூழலில், நாளை ஷார்ஜாவில் நடக்கும் போட்டியில் மும்பை இந்தியன்ஸும் டெல்லி கேபிடள்ஸும் மோதுகின்றன. இந்த போட்டியில் டெல்லி அணி வெற்றி பெற்றால் பிளே ஆஃபிற்கு முன்னேறிவிடும். மும்பை அணி வெற்றி பெற்றால் பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைக்கும். மும்பை அணி வெற்றி பெற்றால் 4வது இடத்திற்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு கூட உள்ளது. 

புள்ளி பட்டியலில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய இந்த முக்கியமான  போட்டியில் வெற்றிபெறும் முனைப்பில் தான் இரு அணிகளுமே களமிறங்கும். இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.

மும்பை இந்தியன்ஸ் அணியில் எந்த மாற்றமும் செய்யப்பட வாய்ப்பில்லை. கடந்த போட்டியில ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் அந்த அணி களமிறங்கும். கடந்த போட்டியில் ஆடாத இஷான் கிஷன், இந்த போட்டியிலும் ஆடமாட்டார். சவுரப் திவாரி நன்றாக ஆடுவதால் அவர்தான் ஆடுவார் என்று தெரிகிறது.

உத்தேச மும்பை இந்தியன்ஸ் அணி:

ரோஹித் சர்மா(கேப்டன்), குயிண்டன் டி காக்(விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், சவுரப் திவாரி, ஹர்திக் பாண்டியா, பொல்லார்டு, க்ருணல் பாண்டியா, ராகுல் சாஹர், நேதன் குல்ட்டர்நைல், டிரெண்ட் போல்ட், பும்ரா.

டெல்லி கேபிடள்ஸ் அணியிலும் எந்த மாற்றமும் செய்வதற்கான அவசியம் இல்லை.

உத்தேச டெல்லி கேபிடள்ஸ் அணி:

ஷிகர் தவான், ஸ்டீவ் ஸ்மித், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட்(கேப்டன், விக்கெட் கீப்பர்), ஷிம்ரான் ஹெட்மயர், லலித் யாதவ், அக்ஸர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், ககிசோ ரபாடா, நோர்க்யா, ஆவேஷ் கான்.
 

click me!