கொரோனாவிற்கு ராஜஸ்தான் அணியின் ரிஸ்ட் ஸ்பின்னர் பலி..! ’

By karthikeyan V  |  First Published May 6, 2021, 8:14 PM IST

கொரோனாவிற்கு ராஜஸ்தான் அணியை சேர்ந்த உள்நாட்டு கிரிக்கெட் வீரர் விவேக் யாதவ் பலியானார்.
 


இந்தியாவில் கொரோனா 2ம் அலை அதிதீவிரமாக பரவிவருகிறது. அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என அனைத்து தரப்பினரும் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா 2ம் அலையை தடுக்க, தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் தினமும் மூன்றரை லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர்.

Latest Videos

கொரோனா 2ம் அலை ஐபிஎல்லையும் விட்டுவைக்கவில்லை. ஐபிஎல்லில் ஆடிய வருண் சக்கரவர்த்தி, சந்தீப் வாரியர், ரிதிமான் சஹா, அமித் மிஷ்ரா ஆகிய வீரர்கள் மற்றும் சிஎஸ்கே அணியின் பவுலிங் பயிற்சியாளர் லக்‌ஷ்மிபதி பாலாஜி ஆகியோருக்கு கொரோனா உறுதியானதையடுத்து, ஐபிஎல் 14வது சீசன் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

கொரோனா இந்தியாவையே உலுக்கிவரும் நிலையில், கொரோனாவிற்கு ரஞ்சி கிரிக்கெட்டில் ராஜஸ்தான் அணிக்காக ஆடிய ரிஸ்ட் ஸ்பின்னர் விவேக் யாதவ், கொரோனாவால் உயிரிழந்தார். 36 வயதான விவேக் யாதவ், 18 முதல் தர போட்டிகளில் ஆடி 57 விக்கெட்டுகளையும், 8 லிஸ்ட் ஏ போட்டிகளில் ஆடி 9 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருக்கிறார்.

விவேக் யாதவிற்கு மனைவி மற்றும் ஒரு மகள் உள்ள நிலையில், வெறும் 36 வயதில் கொரோனாவால் விவேக் யாதவ் உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா, விவேக் யாதவின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
 

click me!