ஆசிய கோப்பை: கொரோனாவிலிருந்து மீண்டு இந்திய அணியுடன் இணைந்தார் ஹெட்கோச் ராகுல் டிராவிட்

By karthikeyan V  |  First Published Aug 28, 2022, 3:40 PM IST

ஆசிய கோப்பையில் இன்று இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொள்ளும் நிலையில், அதற்கு முன்பாக கொரோனாவிலிருந்து மீண்ட ஹெட்கோச் ராகுல் டிராவிட் அணியுடன் இணைந்தார். 
 


ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியது. நேற்று  நடந்த முதல் போட்டியில் இலங்கையை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஃப்கானிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது.

இன்று துபாயில் நடக்கும் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. அதற்கு முன்பாக இந்திய  அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இந்திய அணியுடன் இணைந்துள்ளார்.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க - IND vs PAK பலப்பரீட்சை: இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்..! சீனியர் வீரருக்கு அணியில் இடம் இல்லை

இந்திய அணி கடந்த 23ம் தேதி இந்தியாவிலிருந்து துபாய்க்கு புறப்பட்டு சென்றது. துபாய்க்கு கிளம்புவதற்கு முன் செய்யப்பட்ட பரிசோதனையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிற்கு கொரோனா உறுதியானது. எனவே அவர் இந்திய அணியுடன் துபாய்க்கு செல்லவில்லை.

அதனால் இடைக்கால பயிற்சியாளராக விவிஎஸ் லக்‌ஷ்மண் நியமிக்கப்பட்டு துபாய்க்கு சென்றார். ஆசிய கோப்பையில் இன்று இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொள்ளவுள்ள நிலையில், ராகுல் டிராவிட் கொரோனாவிலிருந்து மீண்டு இந்த போட்டிக்கு முன்பாக இந்திய அணியுடன் இணைந்துள்ளார். ராகுல் டிராவிட்டுக்கு கொரோனா நெகட்டிவ் என வந்ததையடுத்து அவர் துபாய்க்கு சென்று இந்திய அணியுடன் இணைந்துவிட்டார்.

இதையும் படிங்க - Asia Cup: பத்தே ஓவரில் இலக்கை அடித்து ஆஃப்கானிஸ்தான் அபார வெற்றி..! இலங்கை படுதோல்வி

அதனால் விவிஎஸ் லக்‌ஷ்மண் துபாயிலிருந்து நாடு திரும்புகிறார். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிக்கு முன்பாக ராகுல் டிராவிட் இந்திய அணியுடன் இணைந்தது அணிக்கு பெரும் பலமாக அமைந்துள்ளது.
 

click me!