IND vs PAK பலப்பரீட்சை: இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்..! சீனியர் வீரருக்கு அணியில் இடம் இல்லை

By karthikeyan V  |  First Published Aug 28, 2022, 3:04 PM IST

பாகிஸ்தானுக்கு எதிரான இன்றைய போட்டியில் களமிறங்கும் இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
 


ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியது. நேற்று  நடந்த முதல் போட்டியில் இலங்கையை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஃப்கானிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது.

இன்று துபாயில் நடக்கும் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது இந்த போட்டி. இந்த போட்டியில் களமிறங்கும் இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம். 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க - Asia Cup: பந்து பேட்டில் படவே இல்ல.. ஆனால் பதும் நிசாங்கா அவுட்..! தேர்டு அம்பயரின் சர்ச்சை முடிவு

கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் துணை கேப்டன் கேஎல் ராகுல் ஆகிய இருவரும் தொடக்க வீரர்களாக இறங்குவார்கள். 3ம்வரிசையில் கோலி, 4ம் வரிசையில் சூர்யகுமார் யாதவ், 5ம் வரிசையில் ஹர்திக் பாண்டியா ஆகியோர் ஆடுவார்கள்.

விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் களமிறங்குவார். தினேஷ் கார்த்திக்கிற்கு இந்திய அணியில் இடம் கிடைக்க வாய்ப்பில்லை. ஏனெனில் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவுடன் சேர்த்து 6 பவுலர்களுடன் ஆடத்தான் கேப்டன் ரோஹித் விரும்புவார். அதுதான் அணியின் பேலன்ஸுக்கும் வலுசேர்க்கும். எனவே தினேஷ் கார்த்திக்கிற்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்க வாய்ப்பில்லை.

3 ஃபாஸ்ட் பவுலர்கள் மற்றும் 2 ஸ்பின்னர்கள் ஆடுவார்கள். புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான்  ஆகிய மூவரும் ஆடுவார்கள். ஸ்பின்னர்களாக ஜடேஜா மற்றும் சாஹல் ஆகிய இருவரும் ஆடுவார்கள். 

இதையும் படிங்க - Asia Cup: பத்தே ஓவரில் இலக்கை அடித்து ஆஃப்கானிஸ்தான் அபார வெற்றி..! இலங்கை படுதோல்வி

உத்தேச இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான், யுஸ்வேந்திர சாஹல்.
 

click me!