நியூசிலாந்துக்காக பரிந்து பேசிய Rahul Dravid..! வெற்றிக்கு பின் பணிவு.. பலகோடி இதயங்களை வென்ற டிராவிட்

By karthikeyan VFirst Published Nov 22, 2021, 2:19 PM IST
Highlights

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடர் வெற்றிக்கு பிறகு ராகுல் டிராவிட் (Rahul Dravid), நியூசிலாந்து அணிக்காக பரிந்து பேசிய செயல், கோடிக்கணக்கான இதயங்களை வென்றது.
 

டி20 உலக கோப்பை ஃபைனலில் ஆஸ்திரேலியாவிடம் தோற்று கோப்பையை இழந்த நியூசிலாந்து அணி, ஃபைனலில் ஆடிய கையோடு, அதற்கு மறுநாளே(நவம்பர் 15) அமீரகத்திலிருந்து நேரடியாக இந்தியாவிற்கு வந்தது. இந்தியாவில் 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் தொடரில் ஆடுவதற்காக இந்தியா வந்தது.

இந்தியா - நியூசிலாந்து இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் நியூசிலாந்து அணியை ஒயிட்வாஷ் செய்து 3-0 என இந்திய அணி டி20 தொடரை வென்றது. ராகுல் டிராவிட்டின் பயிற்சியில், ரோஹித் சர்மாவின் கேப்டன்சியில் இந்திய அணி ஆடிய முதல் தொடர் இதுவென்பதால், இந்த தொடரின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், இந்த தொடரில் அபாரமாக ஆடி இந்திய அணி 3-0 என தொடரை வென்றது.

இந்த தொடரின் வெற்றிக்கு பின்னர் பேசிய இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், நல்ல வெற்றி. அனைவருமே தொடர் முழுக்க நன்றாக ஆடினார்கள். சிறப்பாக தொடங்கியதில் மகிழ்ச்சி. நாம் வெற்றி பெற்ற அதேவேளையில், கொஞ்சம் எதார்த்தமாகவும் இருக்க வேண்டும்.  டி20 உலக கோப்பை ஃபைனலில் ஆடிவிட்டு உடனடியாக இந்தியாவிற்கு வந்து அடுத்த 6 நாட்களில் 3 டி20 போட்டிகளில் ஆடுவது என்பது எளிதான காரியமே அல்ல என்று நியூசிலாந்து அணியின் பார்வையிலிருந்து எதார்த்தத்தை எடுத்துரைத்து அந்த அணிக்கு ஆதரவாக பேசினார் ராகுல் டிராவிட்.

ராகுல் டிராவிட் எப்போதுமே வெற்றி மமதையில் ஆடும் நபர் அல்ல. தனது பயிற்சியாளர் பதவியை வெற்றியுடன் தொடங்கிய மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஒதுக்கிவைத்துவிட்டு, நியூசிலாந்து அணிக்காக பரிந்து பேசிய ராகுல் டிராவிட், மீண்டுமொருமுறை தனது பணிவால் கோடிக்கணக்கான இதயங்களை வென்றுவிட்டார்.

இந்திய அணிக்கு இந்த வெற்றி சிறப்பானது. ஆனால் இதிலிருந்து பாடங்களை கற்றுக்கொண்டு அடுத்தகட்டத்தை நோக்கி நகர வேண்டும் என்றார் ராகுல் டிராவிட்.
 

click me!