ஐபிஎல் 16வது சீசனில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
ஐபிஎல் 16வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இன்று லக்னோவில் நடக்கும் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த சீசனில் அபாரமாக ஆடி வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் 2ம் இடத்தில் இருக்கும் லக்னோ அணி வெற்றி பயணத்தை தொடரும் முனைப்பில் களமிறங்கியுள்ளது.
இந்த சீசனின் முதலிரண்டு போட்டிகளில் ஜெயித்த பஞ்சாப் கிங்ஸ் அணி, அடுத்த 2 போட்டிகளிலும் தோல்வியை தழுவிய நிலையில், மீண்டும் வெற்றியை பெறும் முனைப்பில் களமிறங்கியுள்ளது. பஞ்சாப் கிங்ஸ் அணியில் தனி நபராக பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டுவந்த ஒரே வீரர் கேப்டன் ஷிகர் தவான் தான். அவரும் இந்த போட்டியில் ஆடவில்லை. எனவே சாம் கரன் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்து வழிநடத்துகிறார்.
IPL 2023: டி20 கிரிக்கெட்டில் கிறிஸ் கெய்லின் சாதனையை சமன் செய்தார் விராட் கோலி..! வார்னர் முதலிடம்
லக்னோவில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. ஷிகர் தவான் ஆடாததால் அதர்வா டைட் தொடக்க வீரராக ஆடுகிறார்.
பஞ்சாப் கிங்ஸ் அணி:
அதர்வா டைட், மேத்யூ ஷார்ட், ஹர்ப்ரீத் சிங் பாட்டியா, சிக்கந்தர் ராஸா, சாம் கரன் (கேப்டன்), ஜித்தேஷ் ஷர்மா, ஷாருக்கான், ஹர்ப்ரீத் பிரார், ரபாடா, ரரகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங்.
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி:
கேஎல் ராகுல் (கேப்டன்), கைல் மேயர்ஸ், தீபக் ஹூடா, மார்கஸ் ஸ்டோய்னிஸ், க்ருணல் பாண்டியா, நிகோலஸ் பூரன் (விக்கெட் கீப்பர்), ஆயுஷ் பதோனி, ஆவேஷ் கான், யுத்வி சிங் சராக், மார்க் உட், ரவி பிஷ்னோய்.