IPL 2023:விராட் கோலி பொறுப்பான அரைசதம்; மற்ற RCB வீரர்கள் சொதப்பல்! குல்தீப் அபார பவுலிங்; DC-க்கு எளிய இலக்கு

By karthikeyan V  |  First Published Apr 15, 2023, 5:34 PM IST

ஐபிஎல் 16வது சீசனில் டெல்லி கேபிடள்ஸுக்கு எதிராக முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணி 20 ஓவரில் 174 ரன்கள் அடித்து 175 ரன்கள் என்ற இலக்கை டெல்லி அணிக்கு நிர்ணயித்தது.
 


ஐபிஎல் 16வது சீசனின் இன்றைய போட்டியில் ஆர்சிபி - டெல்லி கேபிடள்ஸ் அணிகள் ஆடிவருகின்றன. முதல் 4 போட்டிகளிலும் தோற்ற டெல்லி கேபிடள்ஸ் மற்றும் கடைசி 2 போட்டிகளில் தோற்ற ஆர்சிபி ஆகிய 2 அணிகளுமே வெற்றி வேட்கையுடன் களமிறங்கின.

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடள்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

Latest Videos

டெல்லி கேபிடள்ஸ் அணி:

டேவிட் வார்னர் (கேப்டன்), மிட்செல் மார்ஷ், யஷ் துல், மனீஷ் பாண்டே, அக்ஸர் படேல், அமான் கான், லலித் யாதவ், அபிஷேக் போரெல், குல்தீப் யாதவ், அன்ரிக் நோர்க்யா, முஸ்தாஃபிசுர் ரஹ்மான். 

ஆர்சிபி அணி:

விராட் கோலி, ஃபாஃப் டுப்ளெசிஸ் (கேப்டன்), மஹிபால் லோம்ரார், க்ளென் மேக்ஸ்வெல், ஷபாஸ் அகமது, தினேஷ் கார்த்திக், வனிந்து ஹசர்ங்கா, வனிந்து ஹசரங்கா, ஹர்ஷல் படேல், வைன் பார்னெல், முகமது சிராஜ், விஜய்குமார் வைஷாக்.

முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணியில் விராட் கோலி மட்டுமே பொறுப்புடன் பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார். டுப்ளெசிஸ் 22 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடித்து ஆடிய மஹிபால் லோம்ரார் 26 ரன்களுக்கு ஆட்டமிழக்க, 5ம் வரிசையில் இறக்கிவிடப்பட்ட ஹர்ஷல் படேலை 6 ரன்களுக்கு அக்ஸர் படேல் வீழ்த்த, அடுத்த ஓவரில் மேக்ஸ்வெல் (24) மற்றும் தினேஷ் கார்த்திக் (0) ஆகிய இருவரையும் அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தினார் குல்தீப் யாதவ்.

ஷபாஸ் அகமது 12 பந்தில் 22 ரன்கள் அடித்தார். இம்பேக்ட் பிளேயராக இறக்கிவிடப்பட்ட அனுஜ் ராவத் 22 பந்தில் 15 ரன்கள் மட்டுமே அடிக்க, 20 ஓவரில் 174 ரன்கள் அடித்த ஆர்சிபி அணி, 175 ரன்கல் என்ற எளிய இலக்கை டெல்லி கேபிடள்ஸுக்கு நிர்ணயித்தது. பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இது மிக எளிய இலக்கு ஆகும்.
 

click me!