ஐபிஎல் 16வது சீசனில் ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடள்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
ஐபிஎல் 16வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இன்று பிற்பகல் நடக்கும் போட்டியில் ஆர்சிபி - டெல்லி கேபிடள்ஸ் அணிகள் மோதுகின்றன.
இந்த சீசனின் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கிய ஆர்சிபி அணி, அதன்பின்னர் 2 போட்டிகளில் தோல்வியை தழுவியது. எனவே 2வது வெற்றியை எதிர்நோக்கி ஆர்சிபி அணி களமிறங்கியுள்ளது.
இந்த சீசனின் முதல் 4 போட்டிகளிலுமே தோற்ற டெல்லி கேபிடள்ஸ் அணி, முதல் வெற்றியை எதிர்நோக்கி இன்றைய போட்டியில் களமிறங்கியுள்ள நிலையில், பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடள்ஸ் கேப்டன் டேவிட் வார்னர் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
IPL 2023: தொடர் தோல்விகளிலிருந்து மீளுமா பஞ்சாப் கிங்ஸ்..? LSG vs PBKS அணிகளின் உத்தேச ஆடும் லெவன்
இரு அணிகளிலும் அதிரடியான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. டெல்லி கேபிடள்ஸ் அணியில் ரோவ்மன் பவலுக்கு பதிலாக மிட்செல் மார்ஷ் சேர்க்கப்பட்டுள்ளார். முதலில் பந்துவீசுவதால் பிரித்வி ஷா ஆடும் லெவனில் எடுக்கப்படவில்லை. 2வது இன்னிங்ஸில் இம்பேக்ட் பிளேயராக இறக்கப்படுவார்.
ஆர்சிபி அணியில் டேவிட் வில்லிக்கு பதிலாக வனிந்து ஹசரங்கா சேர்க்கப்பட்டுள்ளார். விஜய்குமார் வைஷாக் என்ற உள்நாட்டு வீரர் ஆர்சிபி அணியில் இடம்பிடித்துள்ளார். மைக்கேல் பிரேஸ்வெல் பென்ச்சில் உட்காரவைக்கப்பட்டார்.
டெல்லி கேபிடள்ஸ் அணி:
டேவிட் வார்னர் (கேப்டன்), மிட்செல் மார்ஷ், யஷ் துல், மனீஷ் பாண்டே, அக்ஸர் படேல், அமான் கான், லலித் யாதவ், அபிஷேக் போரெல், குல்தீப் யாதவ், அன்ரிக் நோர்க்யா, முஸ்தாஃபிசுர் ரஹ்மான்.
IPL 2023: வாயை கொடுத்து வாங்கி கட்டிய அஷ்வின்..! ஆப்பு அடித்த ஐபிஎல் நிர்வாகம்
ஆர்சிபி அணி:
விராட் கோலி, ஃபாஃப் டுப்ளெசிஸ் (கேப்டன்), மஹிபால் லோம்ரார், க்ளென் மேக்ஸ்வெல், ஷபாஸ் அகமது, தினேஷ் கார்த்திக், வனிந்து ஹசர்ங்கா, வனிந்து ஹசரங்கா, ஹர்ஷல் படேல், வைன் பார்னெல், முகமது சிராஜ், விஜய்குமார் வைஷாக்.