#IPL2021 ஆஸ்திரேலியாவின் ஹாட்ரிக் நாயகனை தட்டி தூக்கிய பஞ்சாப் கிங்ஸ்

Published : Aug 20, 2021, 10:04 PM IST
#IPL2021 ஆஸ்திரேலியாவின் ஹாட்ரிக் நாயகனை தட்டி தூக்கிய பஞ்சாப் கிங்ஸ்

சுருக்கம்

ஐபிஎல் 14வது சீசனின் எஞ்சிய போட்டிகளுக்காக பஞ்சாப் கிங்ஸ் அணி, ஆஸ்திரேலிய ஃபாஸ்ட் பவுலர் நேதன் எல்லிஸை ஒப்பந்தம் செய்துள்ளது.  

ஐபிஎல் 14வது சீசனின் எஞ்சிய போட்டிகள்  வரும் செப்டம்பர் 19ம் தேதி தொடங்குகின்றன. மீதமுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கவுள்ளன. சிஎஸ்கே அணி அமீரகம் சென்றுவிட்ட நிலையில், மற்ற அணிகளும் ஐபிஎல்லுக்காக தயாராகிவருகின்றன.

சில வெளிநாட்டு வீரர்கள், ஐபிஎல் எஞ்சிய போட்டிகளில் ஆடாதது சில அணிகளுக்கு பாதிப்பாக அமையும். அந்தவகையில், பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஆடிவந்த ஆஸ்திரேலிய ஃபாஸ்ட் பவுலர்கள் ரிலே மெரிடித் மற்றும் ஜெய் ரிச்சர்ட்ஸன் ஆகிய இருவரும் காயம் காரணமாக எஞ்சிய போட்டிகளில் ஆடமாட்டார்கள்.

எனவே அந்த இழப்பை ஈடுகட்டும் விதமாக ஆஸ்திரேலிய அணியின் ஃபாஸ்ட் பவுலர் நேதன் எல்லிஸை ஒப்பந்தம் செய்துள்ளது. அண்மையில் வங்கதேச சுற்றுப்பயணத்தில் டி20 தொடரில் ஆஸ்திரேலிய அணியில் அறிமுகமான எல்லிஸ், அறிமுக போட்டியிலேயே ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்தார்.

பிக்பேஷ் லீக்கில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிக்காக சிறப்பாக ஆடி ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்த எல்லிஸ், டி20 உலக கோப்பைக்கான அணியிலும் இடம்பிடித்துள்ளார். இந்நிலையில், அவரை ஒப்பந்தம் செய்துள்ளது பஞ்சாப் கிங்ஸ் அணி.
 

PREV
click me!

Recommended Stories

சஞ்சு சாம்சன் ஆவேசம்.. வலியால் துடித்து அலறிய அம்பயர்.. பதறிய‌ கம்பீர்.. என்ன நடந்தது?
இங்கிலாந்தை கதறவிட்ட ஹெட் 'மாஸ்டர்'.. அட்டகாசமான சதம்.. வலுவான நிலையில் ஆஸ்திரேலியா!