IPL 2021 பவர் ஹிட்டர்களை கொண்ட பஞ்சாப் அணி படுமட்டமான பேட்டிங்..! SRHக்கு பிரகாசமான வெற்றி வாய்ப்பு

Published : Sep 25, 2021, 09:19 PM IST
IPL 2021 பவர் ஹிட்டர்களை கொண்ட பஞ்சாப் அணி படுமட்டமான பேட்டிங்..! SRHக்கு பிரகாசமான வெற்றி வாய்ப்பு

சுருக்கம்

ராகுல், கெய்ல், மயன்க் அகர்வால், பூரன், தீபக் ஹூடா ஆகிய பவர் ஹிட்டர்களை பஞ்சாப் கிங்ஸ் அணியை 20 ஓவரில் வெறும் 125 ரன்களுக்கு சுருட்டியது சன்ரைசர்ஸ் அணி. 126 ரன்கள் என்பது சன்ரைசர்ஸ் அணி எளிதாக அடித்துவிடக்கூடிய இலக்கு என்பதால், இந்த சீசனில் அந்த அணி 2வது வெற்றியை பெற அருமையான வாய்ப்பு இது.  

ஐபிஎல் 14வது சீசனில் ஷார்ஜாவில் நடந்துவரும் இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தும் பஞ்சாப் கிங்ஸும் ஆடிவருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி, ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான ராகுல், தொடக்கம் முதலே வேகமாக ஸ்கோர் செய்ய முடியாமல் திணறினார். 21 பந்தில் 21 ரன்கள் மட்டுமே அடித்து பவர்ப்ளேயிலேயே ஆட்டமிழந்தார் ராகுல். அவரைத்தொடர்ந்து மயன்க் அகர்வாலும் 5 ரன்னிலும், கிறிஸ் கெய்ல் 14 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 

அதன்பின்னர் பூரன் 8 ரன்னுக்கும் மார்க்ரம் 28 ரன்னுக்கும் வெளியேறினர். தொடக்கம் முதலே பஞ்சாப் கிங்ஸ் அணி வீரர்கள் சீரான இடைவெளியில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறியதால், அந்த அணி 20 ஓவரில் வெறும் 125 ரன்கள் மட்டுமே அடித்தது.

கேஎல் ராகுல், மயன்க் அகர்வால், கெய்ல், பூரன், மார்க்ரம், தீபக் ஹூடா என பவர் ஹிட்டர்கள் பலரை கொண்ட பஞ்சாப் கிங்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பவுலர்களின் அபாரமான பவுலிங்கால் வெறும் 125 ரன்களுக்கே சுருண்டது பஞ்சாப் அணி.

126 ரன்கள் மட்டுமே சன்ரைசர்ஸுக்கு தேவை என்பதால் சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெறுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
 

PREV
click me!

Recommended Stories

IND vs SA 2nd T20: சுப்மன் கில், சூர்யகுமார் படுமோசம்..! இந்தியாவை ஊதித்தள்ளிய தென்னாப்பிரிக்கா!
டி20 உலகக்கோப்பை டிக்கெட் வெறும் 100 ரூபாய் தான்! எப்படி புக் செய்வது? முழு விவரம் இதோ!