IPL 2021 #SRHvsPBKS டாஸ் ரிப்போர்ட்.. பஞ்சாப் கிங்ஸ் அணியில் மறுபடியும் தாறுமாறு மாற்றங்கள்

By karthikeyan VFirst Published Sep 25, 2021, 7:21 PM IST
Highlights

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.
 

ஐபிஎல் 14வது சீசனில் ஷார்ஜாவில் நடக்கும் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தும் பஞ்சாப் கிங்ஸும் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.

இந்த போட்டிக்கான பஞ்சாப் அணியிலும் 3 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பஞ்சாப் அணி ஒவ்வொரு போட்டிக்கான அணியிலும் மாற்றங்கள் செய்துகொண்டே இருப்பது கடும் விமர்சனத்துக்குள்ளானது. ஆனாலும் இந்த போட்டிக்கான அணியிலும் 3 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

ஃபேபியன் ஆலன் நீக்கப்பட்டும் அதிரடி மன்னன் யுனிவர்ஸ் பாஸ் கிறிஸ் கெய்ல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அடில் ரஷீத்துக்கு பதிலாக நேதன் எல்லிஸும், இஷான் போரெலுக்கு பதிலாக ரவி பிஷ்னோயும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பஞ்சாப் கிங்ஸ் அணி:

கேஎல் ராகுல்(கேப்டன், விக்கெட் கீப்பர்), மயன்க் அகர்வால், கெய்ல், மார்க்ரம், பூரன், தீபக் ஹூடா, ஹர்ப்ரீத் ப்ரார், நேதன் எல்லிஸ், ஷமி, அர்ஷ்தீப் சிங், ரவி பிஷ்னோய்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி:

டேவிட் வார்னர், ரிதிமான் சஹா(விக்கெட் கீப்பர்), கேன் வில்லியம்சன்(கேப்டன்), மனீஷ் பாண்டே, கேதர் ஜாதவ், அப்துல் சமாத், ஜேசன் ஹோல்டர், ரஷீத் கான், புவனேஷ்வர் குமார், சந்தீப் ஷர்மா, கலீல் அகமது.
 

click me!