IPL 2021 பஞ்சாப் கிங்ஸை குறைந்த ரன்னுக்கு சுருட்டிய மும்பை அணி..! மும்பை இந்தியன்ஸ் ஈசியா ஜெயிச்சுரும்

Published : Sep 28, 2021, 09:30 PM ISTUpdated : Sep 28, 2021, 09:40 PM IST
IPL 2021 பஞ்சாப் கிங்ஸை குறைந்த ரன்னுக்கு சுருட்டிய மும்பை அணி..! மும்பை இந்தியன்ஸ் ஈசியா ஜெயிச்சுரும்

சுருக்கம்

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணி, 20 ஓவரில் 135 ரன்கள் மட்டுமே அடித்து 136 ரன்கள் என்ற எளிய இலக்கை மும்பை இந்தியன்ஸுக்கு நிர்ணயித்துள்ளது.  

ஐபிஎல் 14வது சீசனில் அபுதாபியில் இன்று நடந்துவரும் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக ராகுலும் மந்தீப் சிங்கும் ஆடினர். மயன்க் அகர்வால் இந்த போட்டியில் ஆடாததால், மந்தீப் சிங் ஆடினார். மந்தீப் சிங் 15 ரன்னில் க்ருணல் பாண்டியாவின் பந்தில் ஆட்டமிழந்தார். பொல்லார்டின் பவுலிங்கில் ஒரே ஓவரில் கெய்ல்(1), கேஎல் ராகுல்(21) ஆகிய இருவரும் ஆட்டமிழந்தனர். 

பூரன் 2 ரன்னில் ஆட்டமிழக்க, 48 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்த பஞ்சாப் அணிக்கு மார்க்ரமும் தீபக் ஹூடாவும் இணைந்து 5வது விக்கெட்டுக்கு 61 ரன்களை சேர்த்தனர். மார்க்ரம் 42 ரன்னிலும் தீபக் ஹூடா 28 ரன்னிலும் ஆட்டமிழக்க, ஹர்ப்ரீத் ப்ரார் 14 ரன்கள் அடிக்க, 20 ஓவரில் 135 ரன்கள் மட்டுமே அடித்தது பஞ்சாப் அணி.

136 ரன்கள் என்பது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மிக எளிதான இலக்கு என்பதால் மும்பை அணி அதை எளிதாக அடித்துவிடும்.
 

PREV
click me!

Recommended Stories

IND vs SA: மாஸ் காட்டும் பாண்டியா.. 3வது T20யில் படைக்கப்போகும் புதிய சாதனை
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் விளையாடும் விராட் கோலி..! ரசிகர்களுக்கு குட் நியூஸ்!