IPL 2023: சாம் கரன், ஜித்தேஷ் ஷர்மா, ஷாருக்கான் அதிரடி பேட்டிங்..! RR-க்கு சவாலான இலக்கை நிர்ணயித்தது PBKS

By karthikeyan V  |  First Published May 19, 2023, 9:39 PM IST

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான முக்கியமான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவரில் 187 ரன்கள் அடித்து, 188 ரன்கள் என்ற சவாலான இலக்கை ராஜஸ்தான் அணிக்கு நிர்ணயித்துள்ளது.
 


ஐபிஎல் 16வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், குஜராத் டைட்டன்ஸ் மட்டுமே பிளே ஆஃபிற்கு முன்னேறீயுள்ளது. எஞ்சிய 3 இடங்களுக்கு லக்னோ, சிஎஸ்கே, மும்பை, ஆர்சிபி அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப்  கிங்ஸ் அணிகளுக்கான வாய்ப்பு மிகக்கடினமானதுதான் என்றாலும், டாப்பில் இருக்கும் அணிகளின் வெற்றி தோல்விகளை பொறுத்து பின்புற வாய்ப்பிருப்பதால் இரு அணிகளும் வெற்றி முனைப்புடன் களமிறங்கின. 

Latest Videos

தர்மசாலாவில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். 

ICC WTC ஃபைனல்: பெஸ்ட் ஃபார்முக்கு வந்த விராட் கோலி.. ஆஸ்திரேலியாவை எச்சரிக்கும் ரிக்கி பாண்டிங்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி: 

யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன் (கேப்டன்), தேவ்தத் படிக்கல், ரியான் பராக், ஷிம்ரான் ஹெட்மயர், ஆடம் ஸாம்பா, டிரெண்ட் போல்ட், நவ்தீப் சைனி, சந்தீப் ஷர்மா, சாஹல்.

பஞ்சாப் கிங்ஸ் அணி: 

ஷிகர் தவான் (கேப்டன்), பிரப்சிம்ரன் சிங், அதர்வா டைட், லியாம் லிவிங்ஸ்டோன், சாம் கரன், ஜித்தேஷ் ஷர்மா, ஷாருக்கான், ஹர்ப்ரீத் பிரார், ராகுல் சாஹர், ககிசோ ரபாடா, அர்ஷ்தீப் சிங். 

முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர் பிரப்சிம்ரன் சிங் 2 ரன்னுக்கு ஆட்டமிழக்க, மற்றொரு தொடக்க வீரரும் கேப்டனுமான ஷிகர் தவான் 17 ரன்களுக்கும், அதர்வா டைட் 19 ரன்களுக்கும், லிவிங்ஸ்டோன் 9 ரன்களூக்கும் ஆட்டமிழக்க, 50 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

IPL 2023: சீசனின் பாதியில் ஓடிய ஆர்ச்சருக்கு ஒரு ரூபாய் கூட சம்பளம் கொடுக்கக்கூடாது..! கவாஸ்கர் கடும் விளாசல்

அதன்பின்னர் ஜித்தேஷ் ஷர்மா மற்றும் சாம் கரன் ஆகிய இருவரும் இணைந்து பொறுப்புடன் பேட்டிங் ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். அதிரடியாக ஆடி 28 பந்தில் 3 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 44 ரன்கள் அடித்து ஜித்தேஷ் ஷர்மா ஆட்டமிழக்க, அதன்பின்னர் இறங்கிய ஷாருக்கான் அதிரடியாக ஆடி 23 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 41 ரன்கள் அடித்து இன்னிங்ஸை முடித்து கொடுத்தார். சாம் கரன் 31 பந்தில் 49 ரன்கள் அடிக்க, 20 ஓவரில் 187 ரன்கள் அடித்த பஞ்சாப் கிங்ஸ் அணி, 188 ரன்கள் என்ற சவாலான இலக்கை ராஜஸ்தானுக்கு நிர்ணயித்தது.

click me!