PBKS vs LSG: லக்னோ அணியில் ஒரு மாற்றம்..? இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

Published : Apr 29, 2022, 02:37 PM IST
PBKS vs LSG: லக்னோ அணியில் ஒரு மாற்றம்..? இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

சுருக்கம்

பஞ்சாப் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான இன்றைய போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.  

ஐபிஎல் 15வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், புனேவில் இன்று நடக்கும் போட்டியில் பஞ்சாப்  கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. லக்னோ அணி இந்த சீசனில் அபாரமாக விளையாடி வெற்றிகளை குவித்துவரும் நிலையில், பஞ்சாப் அணிக்கு இன்றைய போட்டியில் வெற்றி முக்கியம்.

பஞ்சாப் அணி இந்த சீசனில் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அதனால் புள்ளி பட்டியலில் சற்றே பின் தங்கியிருக்கும் பஞ்சாப் அணிக்கு இன்றைய போட்டியில் வெற்றி பெறுவது முக்கியம்.

ஆனாலும் பஞ்சாப் கிங்ஸ் அணியில் எந்த மாற்றமும் செய்யப்பட வாய்ப்பில்லை. கடந்த போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் களமிறங்கும்.

உத்தேச பஞ்சாப் கிங்ஸ் அணி:

ஷிகர் தவான், மயன்க் அகர்வால் (கேப்டன்), பானுகா ராஜபக்சா, லியாம் லிவிங்ஸ்டோன், ஜானி பேர்ஸ்டோ, ஜித்தேஷ் ஷர்மா (விக்கெட் கீப்பர்), ரிஷி தவான், ககிசோ ரபாடா, ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங், சந்தீப் ஷர்மா.

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியில் ஆவேஷ் கான் - மோசின் கான் ஆகிய இருவரில் ஒருவர் ஆடுவார். மற்றபடி வேறு எந்த மாற்றமும் செய்யப்பட வாய்ப்பில்லை.

உத்தேச லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி:

குயிண்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), கேஎல் ராகுல் (கேப்டன்), மனீஷ் பாண்டே, க்ருணல் பாண்டியா, தீபக் ஹூடா, ஆயுஷ் பதோனி, மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஜேசன் ஹோல்டர், ஆவேஷ் கான்/மோசின் கான், துஷ்மந்தா சமீரா, ரவி பிஷ்னோய்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA 2nd T20: ஒரு வழியாக டாஸ் வென்ற SKY.. இந்திய அணி பிளேயிங் லெவன் இதோ!
வெறித்தனமான CSK ரசிகர்.. திருமணத்துக்கு முன் மாப்பிள்ளை போட்ட கிரிக்கெட் ஒப்பந்தம்!