இதைவிட ஈசியான கேட்ச் எப்படி வரும் புஜாரா? நீங்க தவறவிட்டது கேட்ச்சை இல்ல; மேட்ச்சை! கோபத்தை அடக்கி நின்ற கோலி

By karthikeyan VFirst Published Jan 14, 2022, 3:22 PM IST
Highlights

இந்திய அணிக்கு சிம்ம சொப்பனமாக திகழும் தென்னாப்பிரிக்க வீரர் கீகன் பீட்டர்சன் கொடுத்த எளிய கேட்ச்சை தவறவிட்டார் புஜாரா.
 

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 2 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றதால் தொடர் 1-1 என சமனில் உள்ள நிலையில், கடைசி டெஸ்ட் போட்டி கேப்டவுனில் நடந்துவருகிறது.

தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 223 ரன்கள் அடித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி 79 ரன்கள் அடித்தார். இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 210 ரன்கள் அடித்தது. தென்னாப்பிரிக்க அணியில் அதிகபட்சமாக கீகன் பீட்டர்சன் 72 ரன்கள் அடித்தார். இந்திய அணி சார்பில் பும்ரா அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

13 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி, ரிஷப் பண்ட்டின் பொறுப்பான சதத்தால் (100*) 198 ரன்கள் அடித்த இந்திய அணி, 211 ரன்கள் முன்னிலை பெற்று, 212 ரன்கள் என்ற இலக்கை தென்னாப்பிரிக்காவுக்கு நிர்ணயித்தது. 

212 ரன்கள் என்ற இலக்கை விரட்ட தொடங்கிய தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர் மார்க்ரம் 16 ரன்னில் ஷமியின் பந்தில் ஆட்டமிழந்தார். 3ம் நாள் ஆட்டத்தின் கடைசி ஓவரில் டீன் எல்கர் 30 ரன்னில் பும்ராவின் பந்தில் ஆட்டமிழந்தார். 4ம் நாள் ஆட்டத்தை கீகன் பீட்டர்சனும் வாண்டர் டசனும் தொடர்ந்தனர். இருவரும் நிதானமாக ஆடினர். பும்ராவும் ஷமியும் விக்கெட்டுக்காக கடுமையாக போராடினர்.

அபாரமாக ஆடிய பீட்டர்சன் அரைசதம் அடித்தார். அரைசதத்திற்கு பின்னர், தென்னாப்பிரிக்காவின் ஸ்கோர் 129/2 என இருந்தபோது இன்னிங்ஸின் 40வது ஓவரில் பும்ராவின் பந்தில் பீட்டர்சன் ஒரு கேட்ச் கொடுத்தார். பும்ரா வீசிய பந்து, பீட்டர்சனின் பேட்டில் அவுட்சைட் எட்ஜ் ஆகி முதல் ஸ்லிப்பில் நின்ற புஜாராவின் கைக்கு நேராக சென்றது. ஆனால் மிக மிக எளிதான அந்த கேட்ச்சை கோட்டைவிட்டார் புஜாரா. இதைவிட எளிதான கேட்ச் வரவே வராது. அப்படிப்பட்ட கேட்ச்சை கோட்டைவிட்டார் புஜாரா. புஜாரா கோட்டைவிட்டது கேட்ச்சை அல்ல; மேட்ச்சை என்று அனைவருக்குமே தெரியும். ஆனாலும் கேப்டன் கோலி அவரது கடுங்கோபத்தை வெளிப்படுத்த முடியாத சூழலில் கோபத்தை அடக்கிக்கொண்டு நின்றது அப்பட்டமாக தெரிந்தது.

கீகன் பீட்டர்சன் தான் அந்த அணியின் முக்கியமான வீரர். ஒவ்வொரு இன்னிங்ஸிலும் அவர் தான் சிறப்பாக ஆடுகிறார். அப்படியான நிலையில், அவரது கேட்ச்சை தவறவிட்டார் புஜாரா.  பேட்டிங்கில் சொதப்புவது மட்டுமல்லாது, ஃபீல்டிங்கிலும் சொதப்பும் புஜாராவின் டெஸ்ட் கெரியர் இத்துடன் முடிந்துவிடுவதற்கான வாய்ப்பு அதிகமுள்ளது. 
 

click me!