புஜாரா - ரோஹித் ஜோடி அபாரம்.. பயிற்சி போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் பவுலிங்கை பதம் பார்த்த இந்திய வீரர்கள்

Published : Aug 18, 2019, 09:22 AM IST
புஜாரா - ரோஹித் ஜோடி அபாரம்.. பயிற்சி போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் பவுலிங்கை பதம் பார்த்த இந்திய வீரர்கள்

சுருக்கம்

வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிவரும் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் மயன்க் அகர்வால், ராகுல் ஆகிய இருவருமே பெரிதாக ஆடவில்லை. மயன்க் 12 ரன்களிலும் ராகுல் 36 ரன்களிலும் ஆட்டமிழக்க, கோலி இந்த போட்டியில் இல்லாததால் நான்காம் வரிசையில் இறங்கிய ரஹானே 1 ரன்னில் ஆட்டமிழந்தார்.   

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி வரும் 22ம் தேதி தொடங்குகிறது. அதற்கு முன், வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிக்கு எதிரான 3 நாள் பயிற்சி போட்டி நேற்று தொடங்கியது. 

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிவரும் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் மயன்க் அகர்வால், ராகுல் ஆகிய இருவருமே பெரிதாக ஆடவில்லை. மயன்க் 12 ரன்களிலும் ராகுல் 36 ரன்களிலும் ஆட்டமிழக்க, கோலி இந்த போட்டியில் இல்லாததால் நான்காம் வரிசையில் இறங்கிய ரஹானே 1 ரன்னில் ஆட்டமிழந்தார். 

53 ரன்களுக்கே இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்துவிட, அதன்பின்னர் புஜாராவுடன் ஜோடி சேர்ந்து ரோஹித் சிறப்பாக ஆடி பார்ட்னர்ஷிப் அமைத்தார். இருவரும் இணைந்து நான்காவது விக்கெட்டுக்கு 132 ரன்களை சேர்த்தனர். அரைசதம் அடித்த ரோஹித் சர்மா 68 ரன்களில் ஆட்டமிழந்தார். 115 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் ரோஹித் சர்மா 68 ரன்கள் அடித்தார். 

தொடர்ந்து சிறப்பாக ஆடி சதமடித்த புஜாரா, 100 ரன்களில் ரிட்டயர்ட் ஹர்ட் ஆகி வெளியேறினார். அதன்பின்னர் ரிஷப் பண்ட் அதிரடியாக ஆடி 53 பந்துகளில் 33 ரன்கள் அடித்து நடையை கட்டினார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஹனுமா விஹாரியும் ஜடேஜாவும் களத்தில் உள்ளனர். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி, 5 விக்கெட் இழப்பிற்கு 297 ரன்கள் அடித்துள்ளது. 
 

PREV
click me!

Recommended Stories

T20 World Cup: இந்திய அணியின் துணை கேப்டனை தூக்கி எறிந்தது ஏன்..? ரகசியம் உடைத்த தேர்வுக்குழு
T20 உலகக்கோப்பை 2026: இந்திய அணி அறிவிப்பு.. சஞ்சு இன், கில் அவுட்.. BCCI அதிரடி