வங்கதேச அணிக்கு புதிய ஹெட் கோச் நியமனம்

By karthikeyan VFirst Published Aug 17, 2019, 5:10 PM IST
Highlights

இந்திய அணியை தொடர்ந்து வங்கதேச அணியும் புதிய தலைமை பயிற்சியாளரை நியமித்துள்ளது. 
 

இந்திய அணியை தொடர்ந்து வங்கதேச அணியும் புதிய தலைமை பயிற்சியாளரை நியமித்துள்ளது. 

உலக கோப்பையில் வங்கதேச அணி சிறப்பாக ஆடியது. 3 வெற்றிகளுடன் 7 புள்ளிகளை பெற்று லீக் சுற்றுடன் வெளியேறியது. ஆனாலும் அந்த அணியின் ஆட்டம் சிறப்பாக இருந்தது. 

உலக கோப்பையில் குறிப்பாக ஷகிப் அல் ஹசன் அபாரமாக ஆடினர். எந்த அணிக்கு எதிராகவும் எளிதாக விட்டுக்கொடுக்கவில்லை. கடுமையாக போராடியே தோற்றனர். நன்றாக ஆடியும் அந்த அணியால் அரையிறுதிக்கு முன்னேற முடியாதது அந்த அணியின் பார்வையில் அவர்களுக்கு பெரிய இழப்புதான்.

உலக கோப்பை தோல்வியை அடுத்து அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீவ் ரோட்ஸ், உலக கோப்பை தொடர் முடிவதற்கு முன்பே அதிரடியாக நீக்கப்பட்டார். வங்கதேச அணியின் ஸ்பின் பவுலிங் பயிற்சியாளர் சுனில் ஜோஷி மற்றும் ஃபாஸ்ட் பவுலிங் பயிற்சியாளர் குர்ட்னி வால்ஷ் ஆகியோரின் பதவிக்காலம் முடிந்த நிலையில், புதிய ஸ்பின் பவுலிங் பயிற்சியாளராக நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் டேனியல் வெட்டோரி அண்மையில் நியமிக்கப்பட்டார். 

இந்நிலையில், அந்த அணி புதிய தலைமை பயிற்சியாளராக ரசல் டோமிங்கோ நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே தென்னாப்பிரிக்க அணியின் பயிற்சியாளராக இருந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

click me!