PSL 2023: டிம் டேவிட், ஷான் மசூத் காட்டடி அரைசதம்..! 20 ஓவரில் 205 ரன்களை குவித்தது முல்தான் சுல்தான்ஸ்

By karthikeyan V  |  First Published Mar 7, 2023, 9:26 PM IST

பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்கு எதிரான போட்டியில் ஷான் மசூத் மற்றும் டிம் டேவிட் ஆகிய இருவரும் அதிரடியாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்ததால் 20 ஓவரில் 205 ரன்களை குவித்து,  206 ரன்கள் என்ற கடினமான இலக்கை இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்கு நிர்ணயித்துள்ளது.
 


பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. ராவல்பிண்டியில் இன்று நடந்துவரும் போட்டியில் இஸ்லாமாபாத் யுனைடெட் மற்றும் முல்தான் சுல்தான்ஸ் அணிகள் ஆடிவருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற இஸ்லாமாபாத் யுனைடெட் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

இஸ்லாமாபாத் யுனைடெட் அணி: 

Tap to resize

Latest Videos

ரஹ்மதுல்லா குர்பாஸ், அலெக்ஸ் ஹேல்ஸ், காலின் முன்ரோ, ஷதாப் கான் (கேப்டன்), முபாசிர் கான், அசாம் கான் (விக்கெட் கீப்பர்), ஆசிஃப் அலி, ஃபஹீம் அஷ்ரஃப், முகமது வாசிம், ரூமான் ரயீஸ், ஃபஸல்ஹக் ஃபரூக்கி.

IND vs AUS: வாழ்வா சாவா டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் ஒரு அதிரடி மாற்றம்..! உத்தேச ஆடும் லெவன்

முல்தான் சுல்தான்ஸ் அணி:

ஷான் மசூத், முகமது ரிஸ்வான் (கேப்டன், விக்கெட் கீப்பர்), ரைலீ ரூசோ, டேவிட் மில்லர், கைரன் பொல்லார்டு, டிம் டேவிட், அன்வர் அலி, உசாமா மிர், அப்பாஸ் அஃப்ரிடி, முகமது இலியாஸ், ஈசானுல்லா.

முதலில் பேட்டிங் ஆடிய முல்தான் சுல்தான்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் ஷான் மசூத் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகிய இருவரும் இணைந்து அதிரடியாக ஆடி ஸ்கோர் செய்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். அடித்து ஆடிய ரிஸ்வான் 18 பந்தில் 33 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்த ஷான் மசூத் 50 பந்தில் 12 பவுண்டரிகளை விளாசி 75 ரன்களை குவித்தார்.

ICC WTC ஃபைனலில் ராகுல் - கில் இருவரில் யார் ஆடலாம்? ரோஹித் & டிராவிட்டுக்கு ரிக்கி பாண்டிங் கொடுத்த செம ஐடியா

பின்வரிசையில் டிம் டேவிட் சிக்ஸர் மழை பொழிந்தார். அதிரடியாக ஆடி சிக்ஸர்களாக பறக்கவிட்ட டிம் டேவிட், 27 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 60 ரன்களை குவிக்க, 20 ஓவரில் 205 ரன்களை குவித்த முல்தான் சுல்தான்ஸ் அணி, 206 ரன்கள் என்ற கடின இலக்கை இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்கு நிர்ணயித்துள்ளது.
 

click me!