PSL 2023: ஷாஹீன் அஃப்ரிடியின் அதிரடி அரைசதம் வீண்.. லாகூர் காலண்டர்ஸை வீழ்த்தி பெஷாவர் ஸால்மி அபார வெற்றி

Published : Mar 07, 2023, 06:49 PM IST
PSL 2023: ஷாஹீன் அஃப்ரிடியின் அதிரடி அரைசதம் வீண்.. லாகூர் காலண்டர்ஸை வீழ்த்தி பெஷாவர் ஸால்மி அபார வெற்றி

சுருக்கம்

பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் லாகூர் காலண்டர்ஸை 35 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெஷாவர் ஸால்மி அபார வெற்றி பெற்றது.  

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. பெஷாவர் ஸால்மி - லாகூர் காலண்டர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி ராவல்பிண்டியில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெஷாவர் ஸால்மி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

பெஷாவர் ஸால்மி அணி:

முகமது ஹாரிஸ், பாபர் அசாம் (கேப்டன்), சயிம் அயுப், டாம் கோலர் காட்மோர், ஹசீபுல்லா கான் (விக்கெட் கீப்பர்), ரோவ்மன் பவல், ஆமீர் ஜமால், வஹாப் ரியாஸ், அஸ்மதுல்லா ஓமர்ஸாய், முஜீபுர் ரஹ்மான், அர்ஷத் இக்பால்.

ICC WTC ஃபைனலில் ராகுல் - கில் இருவரில் யார் ஆடலாம்? ரோஹித் & டிராவிட்டுக்கு ரிக்கி பாண்டிங் கொடுத்த செம ஐடியா

லாகூர் காலண்டர்ஸ் அணி:

ஃபகர் ஜமான், ஷாவைஸ் இர்ஃபான், சாம் பில்லிங்ஸ் (விக்கெட் கீப்பர்), அப்துல்லா ஷாஃபிக், ஹுசைன் டலட், சிக்கந்தர் ராஸா, ரஷீத் கான், டேவிட் வீஸ், ஷாஹீன் அஃப்ரிடி (கேப்டன்), ஹாரிஸ் ராஃப், ஜமான் கான்.

முதலில் பேட்டிங் ஆடிய பெஷாவர் ஸால்மி அணியின் தொடக்க வீரர்கள் பாபர் அசாம் மற்றும் சயித் அயுப் ஆகிய இருவரும் இணைந்து அதிரடியாக ஆடி இருவருமே அரைசதம் அடித்து 10.4 ஓவரில் 107 ரன்களை குவித்தனர். அதிரடியாக ஆடி 36 பந்தில் 8 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 68 ரன்கள் அடித்தார். அரைசதம் அடித்த பாபர் அசாம் 50 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பின்னர் காட்டடி அடித்த டாம் கோலர் காட்மோர் 16 பந்தில் 2 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 36 ரன்களை விளாசினார். அவர் அவுட்டானபின் பின்வரிசை வீரர்கள் மளமளவென ஆட்டமிழந்ததால் 19.3 ஓவரில் பெஷாவர் ஸால்மி அணி 207 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

208 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய லாகூர் காலண்டர்ஸ் அணி வெறும் 21 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது. அதன்பின்னர் ஹுசைன் டலட் மற்றும் கேப்டன் ஷாஹீன் அஃப்ரிடி ஆகிய இருவரும் இணைந்து அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தனர். அபாரமாக ஆடிய ஷாஹீன் அஃப்ரிடி 36 பந்தில் 3 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 52 ரன்கள் அடித்தது. ஹுசைன் டலட் 37 4 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 63 ரன்களை குவித்தார். ஆனால் அதன்பின்னர் மற்ற வீரர்கள் யாரும் சரியாக ஆடாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் லாகூர் அணி 19.4 ஓவரில் 172 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

Explainer: ICC WTC ஃபைனல்: இந்தியா-இலங்கை இடையே போட்டி! அனைத்துவிதமான சாத்தியக்கூறுகள், கணக்கீடுகள் ஓர் அலசல்

பெஷாவர் ஸால்மி அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருந்த லாகூர் அணிக்கு எதிராக பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் அபாரமாக செயல்பட்டு வெற்றி பெற்றது பெஷாவர் ஸால்மி அணி.
 

PREV
click me!

Recommended Stories

IND vs NZ 2வது ஓடிஐயில் ரோகித், விராட் கோலி சொதப்புவார்கள்.. ஆருடம் சொன்ன அதிரடி வீரர்!
Virat Kohli: ஜஸ்ட் 1 ரன்னில் சச்சினின் சாதனையுடன் போட்டிப்போடும் கோலி