2வது டி20 போட்டி.. இந்திய அணியில் அதிரடி மாற்றம்

By karthikeyan VFirst Published Jan 26, 2020, 9:37 AM IST
Highlights

நியூசிலாந்துக்கு எதிராக இன்று நடக்கவிருக்கும் இரண்டாவது டி20 போட்டியில் களமிறங்கும் உத்தேச இந்திய அணியை பார்ப்போம்.
 

5 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக இந்திய அணி நியூசிலாந்துக்கு சென்றுள்ளது. முதலில் டி20 தொடர் நடந்துவருகிறது. கடந்த 24ம் தேதி ஆக்லாந்தில் நடந்த முதல் டி20 போட்டியில், நியூசிலாந்து அணி நிர்ணயித்த 204 ரன்கள் என்ற இலக்கை இந்திய அணி 19வது ஓவரிலேயே அடித்து அபார வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது. 

இந்நிலையில், இரண்டாவது டி20 போட்டி ஆக்லாந்தில் இன்று நடக்கிறது. இந்திய நேரப்படி இன்று மதியம் 12.20 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இந்த போட்டியிலும் வென்று வெற்றி பயணத்தை தொடரும் முனைப்பில் இந்திய அணியும், முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு பழிதீர்க்கும் முனைப்பில் நியூசிலாந்து அணியும் களமிறங்குகின்றன. இரு அணிகளுமே வெற்றி முனைப்பில் இறங்குவதால் இந்த போட்டி கண்டிப்பாக மிகக்கடுமையாக இருக்கும். 

முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றிருந்தாலும், இந்த போட்டியில் அதே வீரர்களுடன் ஆட வாய்ப்பில்லை. இந்த போட்டிக்கான இந்திய அணியில் ஒரேயொரு மாற்றம் செய்யப்பட வாய்ப்பிருக்கிறது. பேட்டிங் ஆர்டர் மற்றும் ஸ்பின் பவுலிங் காம்பினேஷனில் எந்த மாற்றமும் இருக்க வாய்ப்பில்லை. 

ஆனால் ஃபாஸ்ட் பவுலிங் யூனிட்டில் ஒரு மாற்றம் செய்யப்பட வாய்ப்புள்ளது. ஷர்துல் தாகூருக்கு பதிலாக நவ்தீப் சைனி இந்த போட்டியில் களமிறக்கப்படலாம். ஏனெனில் நவ்தீப் சைனி நல்ல வேகத்துடனும் துல்லியமாகவும் வீசக்கூடியவர். ஆனால் ஷர்துல் தாகூரிடம் வேகமில்லை. அதுமட்டுமல்லாமல் அவரது பவுலிங் எந்தவிதத்திலும் பேட்ஸ்மேனை அச்சுறுத்துவதாகயில்லை. 

கடந்த போட்டியில் ஷர்துல் தாகூரின் பவுலிங்கை கப்டிலும் முன்ரோவும் சேர்ந்து ஆரம்பத்திலேயே அடித்து நொறுக்கிவிட்டனர். அதன்பின்னர் வில்லியம்சனும் அவரது பவுலிங்கை வெளுத்து வாங்கிவிட்டார். கடந்த போட்டியில் அவர் 3 ஓவர்கள் மட்டுமே வீசி 44 ரன்களை விட்டுக்கொடுத்தார். எனவே அவருக்கு பதிலாக நவ்தீப் சைனி இன்று களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கலாம். அதைத்தவிர இந்திய அணியில் வேறு எந்த மாற்றமும் செய்யப்பட வாய்ப்பில்லை. 

2வது டி20 போட்டிக்கான உத்தேச இந்திய அணி:

ரோஹித் சர்மா, கேஎல் ராகுல்(விக்கெட் கீப்பர்), விராட் கோலி(கேப்டன்), ஷ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே, ஷிவம் துபே, ஜடேஜா, சாஹல், ஷமி, நவ்தீப் சைனி, பும்ரா. 
 

click me!