மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளுகு இடையில் இன்று நடக்கும் போட்டியில் எந்த அணி ஜெயித்தாலும் புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடம் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில், புள்ளிப்பட்டியலில் 6ஆவது இடத்தில் இருக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், புள்ளிப்பட்டியலில் 8ஆவது இடத்தில் இருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணியும் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் இந்தப் போட்டியில் எந்த அணி ஜெயித்தாலும் புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடத்திற்கு முன்னேறும். 3ஆவது இடத்தில் 11 போட்டிகள் விளையாடி 5ல் வெற்றி பெற்று 11 புள்ளிகளுடன் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி இருக்கிறது. இன்று நடக்கும் போட்டியில் மும்பை ஜெயித்தாலோ அல்லது பெங்களூரு ஜெயித்தாலோ லக்னோ 4ஆவது இடத்திற்கு தள்ளப்படும்.
யாருக்கெல்லாம் பிளே ஆஃப் வாய்ப்பு? யாரெல்லாம் அடுத்தடுத்த போட்டிகளில் ஜெயிக்க வேண்டும்?
இதுவரையில் மும்பை வான்கடே மைதானத்தில் இரு அணிகளும் 31 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், 17 முறை மும்பை இந்தியன்ஸ் அணியும், 14 முறை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் வெற்றி பெற்றுள்ளன. கடைசியாக நடந்த 10 போட்டிகளில் 6ல் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி கண்டுள்ளது. 4 ஆண்டுகளுக்கு பிறகு இரு அணிகளும் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் மோத உள்ளன. இந்த மைதானத்தில் பெங்களூரு அணி மும்பையை வீழ்த்தி 8 ஆண்டுகள் ஆகியுள்ளது. மும்பை வான்கடேயில் இதுவரையில் இரு அணிகளும் மோதிய 9 போட்டிகளில் 6ல் மும்பை வெற்றி கண்டுள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து ஜோஃப்ரா ஆர்ச்சர் விலகிய நிலையில் அவருக்குப் பதிலாக கிறிஸ் ஜோர்டான் அணியில் ரூ.2 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இனி வரும் போட்டிகளில் ஜோர்டான் அணியில் இடம் பெற்று விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடைசி பந்தில் த்ரில் வெற்றி: 2ஆவது முறையாக அணிக்கு வெற்றி தேடிக் கொடுத்த ரிங்கு சிங்!
மும்பை இந்தியன்ஸ் உத்தேச 11:
இஷான் கிஷான், கேமரூன் க்ரீன், ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, டிம் டேவிட், நேஹல் வதேரா, கிறிஸ் ஜோர்டான், பியூஷ் சாவ்லா, குமார் கார்த்திகேயா, அர்ஷாத் கான்
ஐபிஎல் வரலாற்றில் நடந்த சுவாரஸ்யம்: 7 பந்துக்கு ஆட்ட நாயகன் விருது பெற்ற கிளென் பிலிப்ஸ்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு உத்தேச 11:
ஃபாப் டூ ப்ளேசிஸ், விராட் கோலி, மஹிபால் லோம்ரோர், கிளென் மேக்ஸ்வெல், சுயாஷ் பிரபுதேஷாய் அல்லது அனுஜ் ராவத், கேதர் ஜாதவ், தினேஷ் கார்த்திக், வணிந்து ஹசரங்கா, ஹர்ஷல் படேல், ஜோஷ் ஹசல்வுட், முகமது சிராஜ்