மும்பை 687 எடுத்து டிக்ளேர் - சஞ்சய் மஞ்ரேக்கர் சாதனையை முறியடித்த பிரித்வி ஷா 379 ரன்கள்!

By Rsiva kumarFirst Published Jan 11, 2023, 3:47 PM IST
Highlights

ரஞ்சி டிராபி கிரிக்கெட்டில் அசாம் அணிக்கு எதிரான போட்டியில் பிரித்வி ஷா 379 ரன்கள் குவித்து சஞ்சய் மஞ்ரேக்கர் சாதனையை முறியடித்துள்ளார்.

மும்பை மற்றும் அசாம் அணிகளுக்கு இடையிலான் ரஞ்சி போட்டி கவுகாத்தியில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற அசாம் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய மும்பை அணி 687 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்துள்ளது. இதில், தொடக்க வீரர் பிரித்வி ஷா அதிரடியாக ஆடி முதல் நாளில் மட்டும் 240 ரன்கள் எடுத்திருந்தார். 2ஆம் நாளிலும் ஆடிய அவர் கூடுதலாக 139 ரன்கள் சேர்த்து மொத்தமாக 379 ரன்கள் குவித்துள்ளார். 383 பந்துகளில் 4 சிக்சர்கள், 49 பவுண்டரிகள் உள்பட 379 ரன்கள் குவித்து 21 ரன்களில் 400 ரன்கள் அடிக்கும் வாய்ப்பை கோட்டை விட்டார். 

HBD Rahul Dravid: 12 வயது முதல் கிரிக்கெட் ஆடிய ராகுல் டிராவிட்டின் சாதனை துளிகள் இதோ!

கேப்டன் ரகானே தனது பங்கிற்கு 302 பந்துகளில் 15 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் உள்பட 191 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியாக மும்பை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 687 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து தற்போது அசாம் அணி பேட்டிங் செய்து வருகிறது. ரஞ்சி டிராபி கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த 2ஆவது வீரர் என்ற பெருமையை பிரித்வி ஷா பெற்றுள்ளார். அதுமட்டுமின்றி சஞ்சய் மஞ்ரேக்கரின் 377 ரன்கள் சாதனையை முறியடித்துள்ளார். ஆனால், பாபாசாகேப் நிம்பல்காரின் 443 ரன்கள் (நாட் அவுட்) சாதனை மட்டும் இன்னும் யாராலும் முறியடிக்க முடியவில்லை.

முதல் ஒரு நாள் போட்டியில் ரோகித் சர்மா, விராட் கோலி படைத்த சாதனைகள்!

பிரித்வி ஷா சாதனைகள்:

ரஞ்சி டிராபி கிரிக்கெட்டில் 373 ரன்கள் குவித்துள்ளார். 

விஜய் ஹசாரே டிராபியில் இரட்டை சதம் அடித்துள்ளார்.

சையது முஷ்டாக் அலி டிராபியில் சதம் அடித்துள்ளார்.

புத்தாண்டை சிறப்பாக தொடங்கிய கோலியை பாராட்டிய சிராஜ், சகால்!

அதுமட்டுமின்றி ரஞ்சி டிராபி கிரிக்கெட்டில் 300 ரன்களுக்கு மேல் அடித்த 9 வீரர் என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார். இதற்கு முன்னதாக ஸ்வப்னில் கூகளே (351 நாட் அவுட்), சட்டீஸ்வர் புஜாரா (352), விவிஎஸ் லட்சுமணன் (353), சமித் கோகெல் (359), எம் வி ஸ்ரீதர் (366) மற்றும் மஞ்ரேக்கர் (377), பாபாசாகேப் நிம்பல்கர் (443 நாட் அவுட்) என்று எடுத்துள்ளனர்.

இப்படி பல சாதனைகள் புரிந்த பிரித்வி ஷா அணியிலிருந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறார். சமீபத்தில் இந்தியா வந்த இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரிலும், ஒரு நாள் தொடரிலும் அவர் இடம் பெறவில்லை. அடுத்து இந்தியா வரும் ஆஸ்திரேலியா தொடர் மற்றும் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடர்களிலும் அவர் இடம் பெறுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஆனால், தனது சாதனைகள் மூலமாக பிசிசிஐ மற்றும் இந்திய அணியின் தேர்வுக்குழுவுக்கும் தனது திறமையை வெளிக்காட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

சச்சினின் சதம் சாதனையை முறியடித்த கிங் கோலி!

click me!