PAK vs NZ 2nd ODI: கட்டாய வெற்றியை நோக்கி நியூசிலாந்து - டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங்!

By Rsiva kumarFirst Published Jan 11, 2023, 3:08 PM IST
Highlights

பாகிஸ்தான் அணிக்கு எதிரான 2ஆவது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் பங்கேற்கிறது. ஏற்கனவே நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியும், 2ஆவது டெஸ்ட் போட்டியும் டிராவில் முடிந்த நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒரு நாள் போட்டி கடந்த 9 ஆம் தேதி நடந்தது. இதில், டாஸ் வென்ற பாகிஸ்தான் பௌலிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 9 விக்கெட் இழப்பிற்கு 255 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து எளிய இலக்கை விரட்டிய பாகிஸ்தான் 4 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

HBD Rahul Dravid: 12 வயது முதல் கிரிக்கெட் ஆடிய ராகுல் டிராவிட்டின் சாதனை துளிகள் இதோ!

இதைத் தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையிலான 2ஆவது ஒரு நாள் போட்டி இன்று கராச்சியில் நடக்கிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

முதல் ஒரு நாள் போட்டியில் ரோகித் சர்மா, விராட் கோலி படைத்த சாதனைகள்!

நியூசிலாந்து: பின் ஆலென், டெவான் கான்வே, கேன் வில்லியம்சன் (கேப்டன்), டேரில் மிட்செல், டாம் லாதம் (விக்கெட் கீப்பர்), கிளென் பிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சாண்ட்னர், இஷ் ஜோதி, டிம் சௌதி, லாக்கி பெர்குசன்

பாகிஸ்தான்: ஃபகர் ஜமான், இமாம் உல் ஹக், பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), ஹாரிஸ் சொஹைல், அகா சல்மான், முகமது நவாஸ், உஸாமா மிர், முகமது வாசிம், நசீம் ஷா, ஹாரிஸ் ராஃப்.

புத்தாண்டை சிறப்பாக தொடங்கிய கோலியை பாராட்டிய சிராஜ், சகால்!

இந்தப் போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் நியூசிலாந்து அணி தீவிர இறங்கியுள்ளது. இந்தப் போட்டியில் ஷிப்லிக்கு பதிலாக இஷ் ஜோதி சேர்க்கப்பட்டுள்ளார். இந்தப் போட்டியில் நியூசிலாந்து தோற்றால் ஒரு நாள் தொடரை பாகிஸ்தான் கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.

சச்சினின் சதம் சாதனையை முறியடித்த கிங் கோலி!

click me!