டெஸ்ட் அணியில் தொடக்க வீரருக்கான இடத்தை உறுதி செய்த இளம் வீரர்.. நீயா நானா போட்டியில் வென்ற வீரர்

By karthikeyan VFirst Published Feb 16, 2020, 9:39 AM IST
Highlights

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் தொடக்க வீரராக இறங்குவதற்கு இரு வீரர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவிய நிலையில், அந்த இடத்தை ஒருவர் உறுதி செய்துவிட்டார். 
 

இந்தியா - நியூசிலாந்து இடையேயான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி வரும் 21ம் தேதி தொடங்குகிறது. ரோஹித் சர்மா இல்லாததால், பிரித்வி ஷா மற்றும் ஷுப்மன் கில் ஆகிய இருவரில் யார், மயன்க் அகர்வாலுடன் தொடக்க வீரராக இறங்குவார் என்பது பெரும் எதிர்பார்ப்பாக இருந்தது. 

இந்நிலையில், இந்தியா மற்றும் நியூசிலாந்து லெவன் அணிகளுக்கு இடையேயான பயிற்சி போட்டியின் முதல் இன்னிங்ஸில் பிரித்வி ஷா மற்றும் கில் ஆகிய இருவருமே டக் அவுட்டாகி அதிர்ச்சியளித்தனர். மயன்க் அகர்வாலும் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். டாப் ஆர்டர்கள் மூவருமே படுமோசமாக அவுட்டானது, இந்திய அணிக்கு அதிர்ச்சியையும் சோகத்தையும் அளிக்கும் சம்பவமாக அமைந்தது. 

ஆனால் முதல் இன்னிங்ஸில் ஹனுமா விஹாரியும் புஜாராவும் நன்றாக ஆடியதால், இந்திய அணி 263 ரன்களை அடித்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய நியூசிலாந்து லெவன் அணியை இந்திய அணி 235 ரன்களுக்கே சுருட்டியது. 

இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரராக மறுபடியும் மயன்க் அகர்வாலுடன் பிரித்வி ஷாவே இறங்கினார். முதல் இன்னிங்ஸில் டக் அவுட்டான பிரித்வி ஷா, இந்த முறை சொதப்பாமல் சிறப்பாக  ஆடினார். களத்திற்கு வந்தது முதலே அடித்து ஆடி, தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் பிரித்வி ஷா. 

இரண்டாவது இன்னிங்ஸில் அதிரடியாக ஆடிய ப்ரித்வி ஷா, 31 பந்தில் 6 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் உட்பட 39 ரன்களை வேகமாக விளாசி ஆட்டமிழந்தார். மயன்க் அகர்வால் 81 ரன்களை குவித்து நம்பிக்கையளித்தார். முதல் இன்னிங்ஸில் டக் அவுட்டான கில், இந்த முறையும் 8 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். ரிஷப் பண்ட் 70 ரன்கள் அடித்தார். 

Also Read - பவுண்டரியும் சிக்ஸருமா பறக்கவிட்டு செம கம்பேக் கொடுத்த ரிஷப் பண்ட்டின் அதிரடி பேட்டிங் வீடியோ.. ஆனால் நோ யூஸ்

பிரித்வி ஷா - ஷுப்மன் கில் ஆகிய இருவரில் ஏற்கனவே பிரித்வி ஷா டெஸ்ட் போட்டிகளில் தொடக்க வீரராக ஆடியிருப்பதால் அவருக்கான வாய்ப்புதான் கூடுதலாக இருந்தது. அதை உணர்த்தும் வகையில், பயிற்சி போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் அவர் தான் தொடக்க வீரராக இறங்கினார். இந்நிலையில், கில் இரண்டு இன்னிங்ஸ்களிலுமே சொதப்பிய நிலையில், இரண்டாவது இன்னிங்ஸில் பிரித்வி ஷா தனது இயல்பான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி தனக்கான வாய்ப்பை வலுப்படுத்தி கொண்டதோடு, தொடக்க வீரருக்கான இடத்தை உறுதியும் செய்தார். 
 

click me!