அவருலாம் 30 வயசுலதான் அறிமுகமே ஆனார்.. ஆனால் அவர்தான் மிஸ்டர் கிரிக்கெட்.. விளையாட வயசு தடையில்லை - ரோஹித்

Published : Feb 15, 2020, 05:07 PM IST
அவருலாம் 30 வயசுலதான் அறிமுகமே ஆனார்.. ஆனால் அவர்தான் மிஸ்டர் கிரிக்கெட்.. விளையாட வயசு தடையில்லை - ரோஹித்

சுருக்கம்

விளையாடுவதற்கும் விளையாட்டில் தங்களது கெரியரை தொடங்குவதற்கும் வயது தடையில்லை என்று ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.   

இந்திய அணியின் அதிரடி தொடக்க வீரர் ரோஹித் சர்மா, நியூசிலாந்துக்கு எதிரான 4வது டி20 போட்டியில் காயமடைந்ததால் ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களிலிருந்து விலகினார். 

இந்நிலையில், ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த அவரிடம், சிறுவர்கள் விளையாட்டில் தங்களது கெரியரை தொடங்க, எது சரியான வயது? என்று கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ரோஹித் சர்மா, மைக் ஹசி மற்றும் ரொனால்டோ ஆகிய இருவரையும் மேற்கோள் காட்டி தனது விளக்கத்தை கொடுத்தார். 

Also Read - செம கம்பேக்குடன் தனது கெத்தை நிரூபித்த பும்ரா.. இன்ஸ்விங்கில் ஸ்டம்ப்பை கழட்டிய வீடியோ

அந்த கேள்விக்கு பதிலளித்து பேசிய ரோஹித் சர்மா, மைக்கேல் ஹசி மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர். உங்களுக்கு தெரியும். அவரது 30வது வயதில் தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமே ஆனார். ஆனால் அதன்பின்னர் 6-7 ஆண்டுகள் கிரிக்கெட் ஆடி, இப்போது மிஸ்டர் கிரிக்கெட் என்றழைக்கப்படுகிறார். அவர் நமக்கெல்லாம் மிகச்சிறந்த பாடம். அவரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும். எனவே எந்த விளையாட்டிற்கும் வயது தடையில்லை என்று தெரிவித்தார்.
 

PREV
click me!

Recommended Stories

T20 World Cup: இந்திய அணியின் துணை கேப்டனை தூக்கி எறிந்தது ஏன்..? ரகசியம் உடைத்த தேர்வுக்குழு
T20 உலகக்கோப்பை 2026: இந்திய அணி அறிவிப்பு.. சஞ்சு இன், கில் அவுட்.. BCCI அதிரடி