செம கம்பேக்குடன் தனது கெத்தை நிரூபித்த பும்ரா.. இன்ஸ்விங்கில் ஸ்டம்ப்பை கழட்டிய வீடியோ

By karthikeyan VFirst Published Feb 15, 2020, 3:47 PM IST
Highlights

காயத்திலிருந்து மீண்ட பிறகு, பும்ராவின் இயல்பான பவுலிங்கை போல மிரட்டலாக இல்லாமல் இருந்த நிலையில், தற்போது பும்ரா மீண்டும் செம கம்பேக் கொடுத்துள்ளார். 

பும்ரா இந்திய அணிக்கு வந்த பிறகுதான், இந்திய அணி பவுலிங்கில் தலைசிறந்து விளங்க தொடங்கியது. பும்ராவின் வருகைக்கு பிறகு, சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இந்திய அணி ஃபாஸ்ட் பவுலிங்கில் தலைநிமிர்ந்தது. பும்ரா, ஷமி ஆகிய இருவரும் மூன்றுவிதமான போட்டிகளிலும் விக்கெட்டுகளை வீழ்த்தி கொடுத்து இந்திய அணிக்கு வெற்றிகளை தேடித்தந்து கொண்டிருக்கின்றனர். இவர்கள் இருவரும் பெரும்பாலான விக்கெட்டுகளை வீழ்த்திவிடுவதால், மற்ற பவுலர்கள் கூட்டத்தோடு கோவிந்தா போட்டு போய்விடுகின்றனர். 

இந்நிலையில், காயத்தால் சில தொடர்களில் ஆடமுடியாத பும்ரா, காயத்திலிருந்து மீண்டு, இலங்கைக்கு எதிரான தொடரில் மீண்டும் அணியில் இடம்பிடித்தார். காயத்திலிருந்து மீண்டுவந்தபிறகு, அவரது பவுலிங் பெரியளவில் எடுபடவில்லை. எதிரணி வீரர்கள் அவரது பவுலிங்கை அடித்து ஆடினர்.

இந்திய அணிக்கு விக்கெட் தேவைப்படும்போதெல்லாம், வீழ்த்தி கொடுப்பவரான பும்ரா, நியூசிலாந்துக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகளில் ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை. பொதுவாக ரன்னை அதிகமாக கொடுக்காமல், எதிரணியை வெகுவாக கட்டுப்படுத்தவல்ல பும்ரா, ஒருநாள் தொடரில் மூன்று போட்டிகளிலுமே 50 ரன்களுக்கு மேல் வழங்கினார். 

பும்ராவின் பவுலிங்கில் நியூசிலாந்து வீரர்கள் விக்கெட்டை இழக்காதது மட்டுமல்லாமல், அவரது பவுலிங்கை அடியும் வெளுத்துவிட்டனர். பும்ராவின் கெரியரில் முதல் முறையாக 3 ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக ஒரு விக்கெட்டை கூட வீழ்த்தாமல் இருந்திருக்கிறார்.

பும்ராவின் பவுலிங் எடுபடாததுதான் நியூசிலாந்தின் வெற்றிக்கு முக்கியமான காரணம். பும்ரா விக்கெட் வீழ்த்த முடியாமல் திணறியது, இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக இருந்தது. இந்நிலையில், நியூசிலாந்து லெவன் அணிக்கு எதிராக நடந்துவரும் பயிற்சி போட்டியில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

Also Read - அவரு செம ஸ்மார்ட்டுங்க.. அவரை இனிமேல் டீம்ல இருந்து தூக்கவே மாட்டாங்க.. இந்திய வீரரை தாறுமாறா புகழ்ந்த அக்தர்

அதிலும் நியூசிலாந்து வீரர் ஃபின் ஆலனை 20 ரன்களில் இன்ஸ்விங்கின் மூலம் கிளீன் போல்டாக்கினார் பும்ரா. பும்ராவின் அந்த ஒரு பந்தே அவர் மீண்டும் ஃபார்முக்கு திரும்பிவிட்டார் என்பதை பறைசாற்றியது. எனவே டெஸ்ட் போட்டிகளில் பும்ராவின் ஃபார்ம் குறித்து கவலை கொள்ள தேவையில்லை. அந்த வீடியோ இதோ.. 

Bumrah back in action.. Class is permanent..
🎥: pic.twitter.com/OKbuL9Kuf8

— Rohit Sharma™ (@Ro45FC_)
click me!