#ENGvsIND இந்திய அணிக்கு செம குட் நியூஸ்.. சிறப்பு அனுமதியில் இங்கிலாந்துக்கு பறக்கும் 2 சூப்பர் வீரர்கள்

By karthikeyan VFirst Published Jul 31, 2021, 2:29 PM IST
Highlights

பிசிசிஐ மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் நடவடிக்கையால், பிரித்வி ஷா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகிய இருவரும் சிறப்பு அனுமதியுடன் இலங்கையிலிருந்து இங்கிலாந்துக்கு செல்கின்றனர்.
 

இங்கிலாந்துக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் உள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்த ஷுப்மன் கில், வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஸ்டாண்ட்பை ஃபாஸ்ட் பவுலர் ஆவேஷ் கான் ஆகிய மூவரும் காயத்தால் இந்த தொடரிலிருந்து விலகினர்.

இதையடுத்து அவர்களுக்கான மாற்று வீரர்களாக பிரித்வி ஷா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகிய இருவரும் அறிவிக்கப்பட்டனர். ஸ்டாண்ட்பை வீரராக எடுக்கப்பட்டிருந்த டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் அபிமன்யூ ஈஸ்வரனும் மெயின் அணியில் சேர்க்கப்பட்டார். பிரித்வி ஷா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகிய இருவரும் இலங்கை தொடரை முடித்துவிட்டு, அங்கிருந்து நேரடியாக இங்கிலாந்துக்கு அனுப்பப்படுகின்றனர்.

இதற்கிடையே, இலங்கை தொடரில் ஆடிவந்த க்ருணல் பாண்டியாவிற்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவருடன் தொடர்பில் இருந்த 8 வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு இலங்கைக்கு எதிரான கடைசி 2 டி20 போட்டிகளிலும் ஆடவில்லை. அந்த தனிமைப்படுத்தப்பட்ட 8 வீரர்களில், பிரித்வி ஷா மற்றும் சூர்யகுமார் யாதவும் அடக்கம்.

அதனால் அவர்கள் இருவரும் இங்கிலாந்துக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டதாக கருதப்பட்டது. இங்கிலாந்துக்குள் நுழையும் வெளிநாட்டவர்களில், இலங்கையை ரெட் லிஸ்ட்டில் சேர்த்து வைத்துள்ளது இங்கிலாந்து. எனவே இலங்கையிலிருந்து பிரித்வி ஷா மற்றும் சூர்யகுமார் யாதவ் செல்வதில் சிக்கல் இருந்தது. ஆனால் பிசிசிஐ, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துடன் பேசி, பிரித்வி ஷா மற்றும் சூர்யகுமார் யாதவை இங்கிலாந்துக்கு அழைத்துச்செல்ல சிறப்பு அனுமதி பெற்றது.

இதையடுத்து, இன்று பிரித்வி ஷாவும் சூர்யகுமாரும் இலங்கையிலிருந்து இங்கிலாந்துக்கு செல்கின்றனர். அங்கு 10 நாட்கள் குவாரண்டினை முடித்துவிட்டு இந்திய அணியுடன் அவர்கள் இணைவார்கள். எனவே முதல் 2 போட்டிகளில் அவர்கள் ஆடமுடியாது. அதன்பின்னர் அவர்கள் ஆட வேண்டிய தேவை ஏற்பட்டால், ஆடவைக்கப்படுவார்கள்.

click me!