பாவம் அந்த பையனுக்குத்தான் இலங்கை டி20 தொடர் ரொம்ப மோசமா அமைஞ்சுருச்சு..! ராகுல் டிராவிட் வருத்தம்

By karthikeyan VFirst Published Jul 30, 2021, 7:38 PM IST
Highlights

இலங்கைக்கு எதிரான டி20 தொடர் சஞ்சு சாம்சனுக்கு மோசமானதாக அமைந்துவிட்டதாக ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
 

இலங்கைக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர், இந்திய அணியில் இளம் வீரர்கள் பலர் அறிமுகமாவதற்கு நல்வாய்ப்பாக அமைந்தது. இஷான் கிஷன், பிரித்வி ஷா, சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், ராகுல் சாஹர், வருண் சக்கரவர்த்தி, சேத்தன் சக்காரியா, நிதிஷ் ராணா, தேவ்தத் படிக்கல், ருதுராஜ் கெய்க்வாட் ஆகிய பல இளம் வீரர்கள் இந்திய அணிக்காக ஆடும் வாய்ப்பு பெற்றனர்.

ஆனால் இவர்களில் சூர்யகுமார் யாதவ், பிரித்வி ஷா, இஷான் கிஷனைத்தவிர வேறு யாருமே கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை. சஞ்சு சாம்சன் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் ஒருநாள் போட்டியில் நன்றாக ஆடிய சஞ்சு சாம்சன், டி20 தொடரில் 3 போட்டிகளிலும் சேர்த்தே மொத்தமாக வெறும் 34 ரன்கள் மட்டுமே அடித்து ஏமாற்றமளித்தார்.

இந்நிலையில், சஞ்சு சாம்சன் குறித்து பேசிய இலங்கை தொடருக்கான இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட், அந்த பிட்ச்சில் பேட்டிங் ஆடுவது எளிதல்ல. ஒருநாள் போட்டியில் நன்றாக ஆடி 46 ரன்கள் அடித்தார் சஞ்சு சாம்சன். ஆனால் கடைசி 2 டி20 போட்டிகளுக்கான பிட்ச் கடும் சவாலானதாக இருந்தது. இந்த தொடரை திரும்பி பார்த்தால் சஞ்சு சாம்சனுக்கு கண்டிப்பாக அதிருப்தியளிக்கும். 

அவருக்கு மட்டுமல்ல; பெரும்பாலான இளம் வீரர்களுக்கு அதிருப்தியளிக்கும் விதமாகவே அமைந்தது. இளம் வீரர்கள் அனைவருமே மிகத்திறமையானவர்கள். எனவே இளம் வீரர்கள் விஷயத்தில் பொறுமை காக்க வேண்டியது அவசியம் என்றார் டிராவிட்.
 

click me!