t20 ind vs aus: 6வது பவுலரா? உத்தேச இந்திய அணியில் யாருக்கு இடம்? ஆஸியுடன் நாளை முதல் டி20 போட்டி

By Pothy Raj  |  First Published Sep 19, 2022, 4:30 PM IST

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஆட்டம், மொஹாலியில் நாளை நடக்கிறது.


இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஆட்டம், மொஹாலியில் நாளை நடக்கிறது.

இந்திய அணி 6வது பந்துவீச்சாளருடன் களமிறங்குமா அல்லது மிடில் ஆர்டரை பலப்படுத்தும் வகையில் கூடுதல் பேட்ஸ்மேனுக்கு வாய்ப்பு அளிக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Latest Videos

undefined

உலகக் கோப்பைக்கு முன்பாக வேகப்பந்துவீச்சாளர் சிலருக்கு ஓய்வு அளிக்கப்பட்டாலும், ஆஸ்திரேலியத் தொடருக்கு அடுத்தார்போல், தென் ஆப்பிரிக்கத் தொடரிலும் இந்திய அணி விளையாடுகிறது. இரு தொடர்களிலும் தனது முழுபலத்துடன் விளையாடி ப்ளேயிங் லெவனை பரிசோதித்து பார்க்க இருக்கிறது.

2 இன்னிங்ஸிலும் ருதுராஜ் கெய்க்வாட் அபார பேட்டிங்! 3வது டெஸ்ட்டில் நியூசி., ஏ அணியை வீழ்த்தி இந்தியா ஏ வெற்றி

ஆசியக் கோப்பைப் போட்டியில் இந்திய அணி சிறப்பாக பேட் செய்தாலும், அதிகமா மாற்றங்களைச் செய்சயவில்லை. ஆனால் பந்துவீச்சில் பும்ரா, ஹர்சல் படேல்இல்லாததால், பந்துவீச்சு பெரிதாக எடுபடவில்லை. ஆனால், இந்தத் தொடரில் படேல், பும்ரா இருவரும் வந்துள்ளனர்.

கே.எல்.ராகுல் கடந்த சில போட்டிகளாக பெரிதாக ஏதும் ஸ்கோர் செய்யவில்லை என்றாலும், தன்னுடன் ராகுல்தான் ஓபனிங் செய்வார் என ரோஹித் சர்மா தெரிவி்த்துவிட்டார். சில நேரங்களில் விராட் கோலியைகூட ஓபனிங் இறக்கி ரோஹித் சர்மா பரிசீலிக்கவும் வாய்ப்புள்ளது. ஆசியக் கோப்பைப் போட்டியில் சதம் அடித்து கோலி நல்ல ஃபார்மில் இருப்பதால் அவருக்கு ஓபனிங் வாய்ப்பும் அளித்து பரிசோதிக்கலாம்.

மூன்றரை ஆண்டுக்கு பிறகு அவரை டி20 அணியில் எடுக்க என்ன காரணம்..? கேப்டன் ரோஹித் சர்மா விளக்கம்

டாப்-4 இடங்களுக்கான வீரர்கள் பெரும்பாலும் உறுதி செய்யப்பட்டாலும், விக்கெட் கீப்பரில் தினேஷ் கார்த்திக், ரிஷப்பந்த் இருவரில் யாருக்கு வாய்ப்பு என்பது பெரிய கேள்வி்க்குறியாகும்.  சிறந்த பினிஷர், நெருக்கடியான தருணங்களில் ஆட்டத்தை மாற்றும் அனுபவம் தினேஷுக்கு அதிகம் உண்டு. ரிஷப் பந்த் நிலைகேள்விக்குரியாக உள்ளது. 

ரவிந்திர ஜடேஜா இல்லாததால் கூடுதல் பேட்ஸ்மேனுக்காக ரிஷப் பந்த் வாய்ப்புப் பெறலாம். ஆசியக் கோப்பைப் போட்டியில் தினேஷ் கார்த்திக்  பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை என்பதால் உலகக் கோப்பைப்போட்டிக்கு முன்பாக வரும் இந்த இரு டி20 தொடர்களும் முக்கியமானவையாகும். தீபக் ஹூடா அணியில் இருந்தாலும் இவரை ஆல்ரவுண்டராக அல்லது பேட்ஸ்மேனாக பயன்படுத்துவதில் இன்னும் குழப்பம் நீடிக்கிறது.

ஜடேஜா காயத்தால் உலகக் கோப்பைப் போட்டியில் இடம் பெறாதது, அணியை பேலன்ஸ் செய்வதில் சிரமம் நீடிக்கிறது. 6 பந்துவீச்சாளர்கள் என்ற நிலையில் இருந்து 5 பந்துவீச்சாளர்களுடன் இந்தியா விளையாட வேண்டிய நெருக்கடியில் இருக்கிறது.

கோலி - ராகுல் இவர்களில் யார் தனது ஓபனிங் பார்ட்னர்..? கேப்டன் ரோஹித் சர்மா ஓபன் டாக்

ஜடேஜா, ஹர்திக் பாண்டியாவுடன், அக்ஸர் படேலும் விளையாடும்போது கூடுதலாக ஒரு பந்துவீச்சாளர் கிடைப்பார். ஆனால், அக்ஸர் படேல், சஹல் ஆகிய இரு சுழற்பந்துவீச்சாளர்கள், பும்ரா, புவனேஷ்வர் குமார், ஹர்சல், ஹர்திக் ஆகிய 4 வேகப்பந்துவீச்சாளர்கள் 5 பந்துவீச்சாளர்களுடன்தான் களமிறங்க முடியும்.

இந்தியஆடுகளங்களைவிட ஆஸ்திரேலிய ஆடுகளங்கள் வேறுபட்டவை. அதை வைத்து அணியில் வீரர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டும்.  இந்தத் தொடரில் ஆஸ்திரேலிய அணி டேவிட் வார்னருக்கு ஓய்வு அளித்துள்ளது. மிட்ஷெல் ஸ்டார்க், ஸ்டாய்னிஷ், மிட்ஷெல் மார்ஷ் ஆகியோர் காயத்தில் அணியில் இடம் பெறவில்லை. ஆஸ்திரேலிய அணியில் டிம் டேவிட்டின் ஆட்டம் அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

நாளை நடக்கும் மொஹாலிஆடுகளம் தட்டையானது. வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எடுபடாது, பேட்ஸ்மேனை நோக்கி பந்துவேகமாக வரும் என்பதால், அடித்து விளையாட அருமையாக இருக்கும். முதலில் பேட்டிங் செய்வதை சேஸிங் எளிமையாக இருக்கும். இங்கு சராசரியாக 150 ரன்களை ஒரு அணி எளிதாக எட்டும் என்பதால், நாளை வானவேடிக்கைக்கு குறைவிருக்காது.

உத்தேச இந்திய அணி

ரோஹித் சர்மா(கேப்டன்), கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, ரவிச்சந்திர அஸ்வின், ஜஸ்பிரித் பும்ரா, யஜுவேந்திர சஹல், ஹர்சல்படேல், புவனேஷ்வர் குமார்

உத்தேச ஆஸ்திரேலிய அணி: 

ஆரோன் பின்ச்(கேப்டன்), ஜோஸ் இங்லிஸ், ஸ்டீவ் ஸ்மித், கிளென் மேக்ஸ்வெல், கேமரூன் க்ரீன், மேத்யூ வேட், பாட் கம்மின்ஸ், டேனியல் சாம்ஸ், ஜோஷ் ஹேசல்வுட், ஆடம் ஸம்பா, கானே ரிச்சார்ட்ஸன்

போட்டி நேரம்: இரவு 7.30 மணிக்கு. ஸ்டார் ஸ்போரட்ஸ் சேனலில் நேரடி ஒளிபரப்பைக் காணலாம்

 

click me!