2 இன்னிங்ஸிலும் ருதுராஜ் கெய்க்வாட் அபார பேட்டிங்! 3வது டெஸ்ட்டில் நியூசி., ஏ அணியை வீழ்த்தி இந்தியா ஏ வெற்றி

By karthikeyan VFirst Published Sep 18, 2022, 11:01 PM IST
Highlights

நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான 3வது டெஸ்ட்டில் இந்தியா ஏ அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
 

நியூசிலாந்து ஏ அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இந்தியா ஏ அணிக்கு எதிராக 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. முதலில் 4 நாட்கள் டெஸ்ட் தொடர் நடந்துவருகிறது.

முதல் 2 டெஸ்ட் போட்டிகள் டிராவான நிலையில், 3வதுடெஸ்ட் போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்தியா ஏ அணி முதல் இன்னிங்ஸில் 293 ரன்கள் அடித்தது. இந்தியா ஏ அணியில் அபாரமாக பேட்டிங் ஆடிய ருதுராஜ் கெய்க்வாட் சதமடித்தார். ருதுராஜ் கெய்க்வாட் 108 ரன்களும், உபேந்திர யாதவ்76 ரன்களும் அடித்தனர்.

இதையும் படிங்க - மூன்றரை ஆண்டுக்கு பிறகு அவரை டி20 அணியில் எடுக்க என்ன காரணம்..? கேப்டன் ரோஹித் சர்மா விளக்கம்

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய நியூசிலாந்து ஏ அணியில் சாப்மேன் அபாரமாக பேட்டிங் ஆடி 92 ரன்களும், சோலியா 54 ரன்களும் அடிக்க, நியூசிலாந்து ஏ அணி முதல் இன்னிங்ஸில் 237 ரன்கள் அடித்தது. 

56 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை ஆடிய இந்தியா ஏ அணியின் தொடக்க வீரர் பிரியங்க் பன்சால் 64 ரன்கள் அடித்தார். முதல் இன்னிங்ஸில் சதமடித்த ருதுராஜ் கெய்க்வாட் 2வது இன்னிங்ஸிலும் சதத்தை நெருங்கினார். ஆனால் 94 ரன்களுக்கு ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார். ஆனால் இந்த இன்னிங்ஸில் ரஜாத் பட்டிதார் சிறப்பாக பேட்டிங் ஆடி சதமடித்தார்.  ரஜாத் பட்டிதார் 109 ரனக்ளும், சர்ஃபராஸ் கான் 63 ரன்களும் அடிக்க, 2வது இன்னிங்ஸில் இந்தியா ஏ அணி 359 ரன்களை குவித்தது.

இதையும் படிங்க - ENGW vs INDW முதல் ODI: அபாரமாக ஆடி சதத்தை தவறவிட்ட ஸ்மிரிதி மந்தனா.. இந்தியா மகளிர் அணி அபார வெற்றி

இந்தியா ஏ அணி மொத்தமாக 415 ரன்கள் முன்னிலை பெற, 416 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய நியூசிலாந்து ஏ அணி 302 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து 113 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா ஏ அணி அபார வெற்றி பெற்றது.
 

click me!