ரோஹித், கோலியை விட சிறந்த பேட்ஸ்மேன் அவர்..! இனிமேல் அதைப்பற்றி பேசாதீங்க.. கம்பீர் நறுக்

By karthikeyan V  |  First Published Sep 18, 2022, 7:54 PM IST

டி20 உலக கோப்பையுடன் ரோஹித்துடன் ராகுல் தான் தொடக்க வீரராக இறங்கவேண்டும் என்றும் இதுதொடர்பான விவாதத்தை தவிர்க்கவேண்டும் என்றும் கௌதம் கம்பீர் கருத்து கூறியுள்ளார்.
 


டி20 உலக கோப்பை வரும் அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. டி20 உலக கோப்பையை வெல்லும் முனைப்பில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தீவிரமாக தயாராகிவருகிறது. டி20 உலக கோப்பைக்கான ரோஹித் சர்மா தலைமையிலான 15 வீரர்களை கொண்ட இந்திய அணி  அண்மையில் அறிவிக்கப்பட்டது.

இந்திய அணி அறிவிக்கப்பட்ட நிலையில், டி20 உலக கோப்பையில் களமிறங்கும் இந்திய அணியின் ஆடும் லெவன் காம்பினேஷன் குறித்து முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து கூறிவருகின்றனர். 

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படிங்க - இதுதான் நம்ம அணி; இதுக்கு சப்போர்ட் பண்ணுங்க..! இந்திய அணி தேர்வை விமர்சித்தவர்களுக்கு கவாஸ்கர் சவுக்கடி

அந்தவகையில், அண்மையில் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியில் ஓபனிங்கில் இறங்கி விராட் கோலி சதமடித்தது, அவரையே ரோஹித்துடன் ஓபனிங்கில் இறக்கலாம் என்ற கருத்து வலுத்துவருகிறது. 

டி20 கிரிக்கெட்டை பொறுத்தமட்டில் விராட் கோலி ஓபனிங்கில் அபாரமாக விளையாடியிருப்பதால் தான் இந்த வலியுறுத்தல் வலுக்கிறது. முன்னாள் வீரர்கள் பலரும் கோலியை ஓபனிங்கில் இறக்கலாம் என்று கருத்து கூறியிருக்கின்றனர்.

இந்நிலையில், இதுகுறித்து பேசியுள்ள முன்னாள் வீரர் கௌதம் கம்பீர், விராட் கோலி ஓபனிங்கில் இறங்கி சதமடித்ததும் ரோஹித் - ராகுல் இணைந்து ஓபனிங்கில் எவ்வளவு சிறப்பாக ஆடியிருக்கின்றனர் என்பதை மறந்துவிட்டோம். ரோஹித்துடன் கோலியை ஓபனிங்கில் இறக்கவேண்டும் என்று பேசுகிறோம். ராகுலை பற்றி யோசித்து பாருங்கள். தனது இடத்திற்கு ஆபத்து வந்துவிடுமோ என்று அவர் பயப்படமாட்டாரா..? அவர் ஒரு போட்டியில் சரியாக ஆடாவிட்டால் கோலியை ஓபனிங்கில் இறக்கிவிடுவார்களோ என்ற பயம் ராகுலுக்கு வந்துவிடும். அது அணிக்கு நல்லதல்ல. 

இதையும் படிங்க - T20 World Cup: இந்திய அணி தெரிந்தே ரிஸ்க் எடுக்கிறது..! மிட்செல் ஜான்சன் எச்சரிக்கை

ராகுல் மாதிரியான டாப் கிளாஸ் வீரரை அந்த மாதிரியான நிலைக்கு தள்ளக்கூடாது. ரோஹித் மற்றும் கோலியை விட சிறந்த வீரர் கேஎல் ராகுல். அவரை நிச்சயமற்ற நிலைக்கு தள்ளக்கூடாது என்று கம்பீர் கருத்து கூறியுள்ளார்.
 

click me!