T20 World Cup: இந்திய அணி தெரிந்தே ரிஸ்க் எடுக்கிறது..! மிட்செல் ஜான்சன் எச்சரிக்கை

By karthikeyan V  |  First Published Sep 18, 2022, 6:02 PM IST

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி தேர்வை கண்ட  மிட்செல் ஜான்சன், இந்திய அணி தெரிந்தே ரிஸ்க் எடுப்பதாக எச்சரித்துள்ளார்.
 


டி20 உலக கோப்பைக்கான அனைத்து அணிகளும் அறிவிக்கப்பட்ட நிலையில், ஒவ்வொரு அணியின் பலம், பலவீனங்களை முன்னாள் வீரர்கள் அலசிவருகின்றனர். அந்தவகையில், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியின் பேலன்ஸ், பலம், பலவீனம் குறித்தும் விவாதிக்கப்படுகிறது.

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி:

Tap to resize

Latest Videos

undefined

ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவிச்சந்திரன் அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், அக்ஸர் படேல், ஜஸ்ப்ரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங்.

இதையும் படிங்க - இதுதான் நம்ம அணி; இதுக்கு சப்போர்ட் பண்ணுங்க..! இந்திய அணி தேர்வை விமர்சிப்பவர்களுக்கு கவாஸ்கர் சவுக்கடி

ஸ்டாண்ட்பை  வீரர்கள் - முகமது ஷமி, ஷ்ரேயாஸ் ஐயர், ரவி பிஷ்னோய், தீபக் சாஹர்.

அந்தவகையில், இந்திய அணி குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் மிட்செல் ஜான்சன் கருத்து கூறியுள்ளார். ஃபாஸ்ட் பவுலிங்கிற்கு சாதகமான ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை நடக்கவுள்ள நிலையில், டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் புவனேஷ்வர் குமார், பும்ரா, ஹர்ஷல் படேல்  மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகிய 4 ஃபாஸ்ட் பவுலர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டிருப்பது குறித்து எச்சரித்துள்ளார் மிட்செல் ஜான்சன்.

இதுகுறித்து பேசிய மிட்செல் ஜான்சன், டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் ஒரு ஆல்ரவுண்டர் (ஹர்திக் பாண்டியா), 2 ஸ்பின்னர்கள் மற்றும் 4 ஃபாஸ்ட் பவுலர்கள் மட்டுமே உள்ளனர். இந்திய அணி 2 ஃபாஸ்ட் பவுலர்களுடன் ஒரு ஆல்ரவுண்டர் (ஹர்திக் பாண்டியா) மற்றும் 2 ஸ்பின்னர்களை ஆடும் லெவனில் எடுக்கும் திட்டத்தில் இருக்கிறது.

இதையும் படிங்க - T20 World Cup: கோலி - ராகுல் இவர்களில் யார் தனது ஓபனிங் பார்ட்னர்..? கேப்டன் ரோஹித் சர்மா ஓபன் டாக்

ஆனால் ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் குறிப்பாக பெர்த்தில் 3 அல்லது 4 முழுநேர ஃபாஸ்ட் பவுலர்களுடன் ஆடியாக வேண்டும். ஆனால் இது தெரிந்தும் கூட, இந்திய அணி மொத்தமாகவே 4 ஃபாஸ்ட்பவுலர்களை மட்டுமே அணியில் எடுத்து ரிஸ்க் எடுத்துள்ளது என்று மிட்செல் ஜான்சன் எச்சரித்துள்ளார்.
 

click me!