ENGW vs INDW முதல் ODI: அபாரமாக ஆடி சதத்தை தவறவிட்ட ஸ்மிரிதி மந்தனா.. இந்தியா மகளிர் அணி அபார வெற்றி

Published : Sep 18, 2022, 10:38 PM IST
ENGW vs INDW முதல் ODI: அபாரமாக ஆடி சதத்தை தவறவிட்ட ஸ்மிரிதி மந்தனா.. இந்தியா மகளிர் அணி அபார வெற்றி

சுருக்கம்

இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.  

இந்திய மகளிர் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிவருகிறது. டி20 தொடரை 1-2 என இங்கிலாந்திடம் இழந்த இந்திய மகளிர் அணி, ஒருநாள் தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது.

இந்தியா - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி இன்று நடந்தது. இந்த போட்டியில் இந்திய மகளிர் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

இதையும் படிங்க - ரோஹித், கோலியை விட சிறந்த பேட்ஸ்மேன் அவர்..! இனிமேல் அதைப்பற்றி பேசாதீங்க.. கம்பீர் நறுக்

முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து மகளிர் அணியின் வியாட் சிறப்பாக பேட்டிங் ஆடினார். ஆனால் 43 ரன்களுக்கு ஆட்டமிழந்து அரைசதத்தை தவறவிட்டார். டேவிட்சன் ரிச்சர்ட்ஸ் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். ஆனால் அவரும் 50 ரன்களுக்கே ஆட்டமிழந்தார். பெரிய இன்னிங்ஸ் ஆடவில்லை.

அதன்பின்னர் எசிஸ்டோன் மற்றும் டியானும் சிறப்பாக பேட்டிங் ஆடி நல்ல பங்களிப்பு செய்தனர். எசிஸ்டோன் 31 ரன்களும், டியானும்24 ரன்கள் அடித்தார். டாப் ஆர்டர் வீராங்கனைகள் சொதப்பினாலும், பின்வரிசை வீராங்கனைகள் பொறுப்பாக பேட்டிங் ஆடி சிறப்பான பங்களிப்பு செய்ததால் 50 ஓவரில் 227 ரன்களையாவது எட்டியது இங்கிலாந்து மகளிர் அணி.

228 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய மகளிர் அணியின் தொடக்க வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா அபாரமாக பேட்டிங் ஆடி 91 ரன்களை குவித்தார். சிறப்பாக பேட்டிங் ஆடிய ஸ்மிரிதி மந்தனா 91 ரன்களில் ஆட்டமிழந்து 9 ரன்னில் சதத்தை தவறவிட்டார். ஷஃபாலி வெர்மா ஒரு ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். 

இதையும் படிங்க - மூன்றரை ஆண்டுக்கு பிறகு அவரை டி20 அணியில் எடுக்க என்ன காரணம்..? கேப்டன் ரோஹித் சர்மா விளக்கம்

அதன்பின்னர் 3ம் வரிசை வீராங்கனையான யஸ்திகா பாட்டியா மற்றும் 4ம் வரிசையில் இறங்கிய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் ஆகிய இருவருமே அரைசதம் அடித்தனர். யஸ்திகா 50 ரன்களுக்கு ஆட்டமிழக்க, 74 ரன்களை குவித்த கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் கடைசி வரை களத்தில் நின்று போட்டியை முடித்து கொடுத்தார்.

45வது ஓவரில் இலக்கை அடித்த இந்திய மகளிர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகிக்கிறது.
 

PREV
click me!

Recommended Stories

ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன 2 அன்கேப்டு இந்திய வீரர்கள்..! லட்டு போல் தூக்கிய சிஎஸ்கே!
சிஎஸ்கே தூக்கி எறிந்த வீரருக்கு அடித்த ஜாக்பாட்..! ரூ.18 கோடியை தட்டித்தூக்கிய யார்க்கர் மன்னன்!