SA20: ரைலீ ரூசோ அரைசதம்.. அரையிறுதியில் பார்ல் ராயல்ஸை வீழ்த்தி ஃபைனலுக்கு முன்னேறியது பிரிட்டோரியா கேபிடள்ஸ்

By karthikeyan VFirst Published Feb 9, 2023, 11:37 AM IST
Highlights

தென்னாப்பிரிக்கா டி20 லீக் அரையிறுதியில் பார்ல் ராயல்ஸை 29 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஃபைனலுக்கு முன்னேறியது பிரிட்டோரியா கேபிடள்ஸ் அணி.
 

தென்னாப்பிரிக்கா டி20 லீக் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பிரிட்டோரியா கேபிடள்ஸ், பார்ல் ராயல்ஸ், ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் ஆகிய 4 அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறின.

பிரிட்டோரியா கேபிடள்ஸ் மற்றும் பார்ல் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான முதல் அரையிறுதி போட்டியில் டாஸ் வென்ற பார்ல் ராயல்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. 

பார்ல் ராயல்ஸ் அணி:

பால் ஸ்டர்லிங், ஜேசன் ராய், ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), டேன் விலாஸ், டேவிட் மில்லர் (கேப்டன்), இயன் மோர்கன், இவான் ஜோன்ஸ், ஆண்டில் ஃபெலுக்வாயோ, ஃபார்ச்சூன், லுங்கி இங்கிடி, டப்ரைஸ் ஷம்ஸி.

IND vs AUS: அஷ்வினுக்கு பயந்து ஆளை மாற்றிய ஆஸ்திரேலிய அணி..! அந்த பயம் இருக்கணும்டா

பிரிட்டோரியா கேபிடள்ஸ் அணி:

ஃபிலிப் சால்ட் (விக்கெட் கீப்பர்), குசால் மெண்டிஸ், தியுனிஸ் டி பிருய்ன் (கேப்டன்), ரைலீ ரூசோ, காலின் இங்ராம், ஜேம்ஸ் நீஷம், செனுரான் முத்துசாமி, மைகேல் பிரிட்டோரியஸ், ஈதன் போஷ், அடில் ரஷீத், அன்ரிக் நோர்க்யா.

முதலில் பேட்டிங் ஆடிய பிரிட்டோரியா கேபிடள்ஸ் அணியின் தொடக்க வீரர் குசால் மெண்டிஸ் 22 ரன்கள் அடித்தார். குசால் மெண்டிஸ்(7), தியுனிஸ் டி பிருய்ன் (9), காலின் இங்ராம் (10), ஜிம்மி நீஷம் (4) ஆகியோர் சோபிக்கவில்லை. ஆனால் நிலைத்து நின்று சிறப்பாக ஆடிய ரைலீ ரூசோ அரைசதம் அடித்தார். 41 பந்தில் 56 ரன்கள் அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். பின்வரிசையில் போஷ் 10 பந்தில் 22 ரன்கள் அடிக்க, 20 ஓவரில் பிரிட்டோரியா கேபிடள்ஸ் அணி 153 ரன்கள் அடித்தது.

154 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய பார்ல் ராயல்ஸ் அணியில் ஜேசன் ராய்(0), ஜோஸ் பட்லர்(13), பால் ஸ்டர்லிங் (21), இயன் மோர்கன்(17), டேவிட் மில்லர் (31) என மிகப்பெரிய மற்றும் அனுபவம் வாய்ந்த வீரர்கள் அணியில் இருந்தும் கூட, ஒருவர் கூட பெரிய இன்னிங்ஸ் ஆடவில்லை. பார்ல் ராயல்ஸ் அணி வீரர்கள் தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் 19 ஓவரில் 124 ரன்களுக்கு ஆல் அவுட்டானது பார்ல் ராயல்ஸ் அணி.

ஆசிய கோப்பை விவகாரத்திற்கு தீர்வு சொன்ன அப்துல் ரசாக்! இவரா இப்படி பேசுறது? வியப்பில் ஆழ்ந்த கிரிக்கெட் உலகம்

29 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற பிரிட்டோரியா கேபிடள்ஸ் அணி ஃபைனலுக்கு முன்னேறியது. ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகளுக்கு இடையேயான 2வது அரையிறுதி போட்டி இன்று நடக்கிறது. இந்த போட்டியில் ஜெயிக்கும் அணி, ஃபைனலில் பிரிட்டோரியா கேபிடள்ஸை எதிர்கொள்ளும்.
 

click me!