இனிமேல் கண்டிப்பா இந்திய அணியில் இடம் கிடைக்காது.. திடீரென ஓய்வு அறிவித்த இந்திய வீரர்

By karthikeyan VFirst Published Feb 21, 2020, 1:03 PM IST
Highlights

இந்திய அணியின் ஸ்பின் பவுலர் பிரக்யான் ஓஜா திடீரென ஓய்வு அறிவித்துள்ளார். 
 

பிரக்யான் ஓஜா 2008ல் வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியில் அறிமுகமானார். அதன்பின்னர் 2009ல் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமானார். 2009 முதல் 2013 வரை 24 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 113 விக்கெட்டுகளையும் 2008 முதல் 2012 வரை 18 ஒருநாள் போட்டிகளில் ஆடி 21 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். 

2013ம் ஆண்டுக்கு பிறகு ஓஜாவிற்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவேயில்லை. ஐபிஎல்லில் டெக்கான் சார்ஜர்ஸ்(ஹைதராபாத்)  மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளில் ஓஜா ஆடியுள்ளார். ரஞ்சியில் ஹைதராபாத், பெங்கால், பிஹார் அணிகளில் ஆடியுள்ளார். இங்கிலாந்தில் நடக்கும் கவுண்டி கிரிக்கெட்டில் சர்ரே அணிக்காகவும் ஆடியிருக்கிறார். 

அவர் இந்திய அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்ட நிலையில், கடந்த 7 ஆண்டுகளில் அதன்பின்னர் இந்திய அணியில் எடுக்கப்படவேயில்லை. இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட் மற்றும் முதல் தர கிரிக்கெட்டுகளிலிருந்து திடீரென ஓய்வு அறிவித்துள்ளார் பிரக்யான் ஓஜா. 33 வயதான ஓஜா இன்னும் 4-5 ஆண்டுகள் கிரிக்கெட் ஆடலாம். ஆனால் திடீரென இன்று ஓய்வு அறிவித்துவிட்டார். 

Also Read - சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் மாபெரும் சாதனையை படைத்த முதல் வீரர் ரோஸ் டெய்லர்

இந்திய அணியில் இனிமேலும் தனக்கு கண்டிப்பாக இடம் கிடைக்காது என்பதை உணர்ந்த ஓஜா, 33 வயதிலேயே ஓய்வு அறிவித்துவிட்டார். 

click me!