அறிமுக போட்டியிலயே தலைசிறந்த வீரர்களை தட்டி தூக்கிய ஃபாஸ்ட் பவுலர்

By karthikeyan VFirst Published Feb 21, 2020, 12:23 PM IST
Highlights

இந்தியாவுக்கு எதிராக நடந்துவரும் முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுகமான நியூசிலாந்து ஃபாஸ்ட் பவுலர் கைல் ஜாமிசன், முதல் போட்டியிலேயே முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். 
 

நியூசிலாந்தின் உயரமான வீரர் கைல் ஜாமிசன். ஃபாஸ்ட் பவுலரான இவர், இந்தியா ஏ அணிக்கு எதிரான போட்டிகளில் நியூசிலாந்து ஏ அணியில் சிறப்பாக பந்துவீசி அசத்தினார். 

அதன்விளைவாக, இந்திய அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமானார் கைல் ஜாமிசன். அந்த போட்டியில் நியூசிலாந்து அணியில் அறிமுகமான ஜாமிசன், பிரித்வி ஷா மற்றும் நவ்தீப் சைனி ஆகிய இருவரின் விக்கெட்டுகளையும் வீழ்த்தி, அறிமுக போட்டியிலேயே ஆட்டநாயகன் விருதையும் வென்றார். கடைசி ஒருநாள் போட்டியில் ஒரு விக்கெட் வீழ்த்தினார். 

இதையடுத்து டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து அணியிலும் இடம்பிடித்த ஜாமிசன், இன்று தொடங்கி நடந்துவரும் முதல் டெஸ்ட் போட்டியில், டெஸ்ட் கிரிகெட்டில் நியூசிலாந்து அணியில் அறிமுகமானார். 

 

அறிமுக போட்டியிலேயே, இந்திய அணியின் நட்சத்திர வீரர்களும், சர்வதேச கிரிக்கெட்டில் தலைசிறந்த வீரர்களுமான விராட் கோலி மற்றும் புஜாரா ஆகிய இருவரையும் சொற்ப ரன்களில் வீழ்த்தினார். வெலிங்டனில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்ததையடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. 

Also Read - சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் மாபெரும் சாதனையை படைத்த முதல் வீரர் ரோஸ் டெய்லர்

இந்திய அணி 101 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. விராட் கோலி 2 ரன்னிலும் புஜாரா 11 ரன்னிலும் விஹாரி 7 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான இவர்கள் மூவரையுமே ஜாமிசன் தான் வீழ்த்தினார். அறிமுக போட்டியிலேயே அபாரமாக வீசி, இந்திய அணியின் முக்கியமான 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். 

மயன்க் அகர்வால் 34 ரன்களிலும் பிரித்வி ஷா 16 ரன்களிலும் முறையே போல்ட் மற்றும் சௌதியின் பவுலிங்கில் ஆட்டமிழந்தனர். மழையால் முதல் நாள் ஆட்டத்தின் ஒன்றரை செசன் பாதிக்கப்பட்டதையடுத்து, 55 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 122 ரன்களை அடித்துள்ளது இந்திய அணி. ரஹானே 38 ரன்களுடனும் ரிஷப் பண்ட் 10 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 
 

click me!