அஷ்வினை பக்காவா பிளான் போட்டு தட்டி தூக்கிய டெல்லி கேபிடள்ஸ்.. சூட்சமத்தை வெளியிட்ட பாண்டிங்

By karthikeyan VFirst Published Nov 9, 2019, 5:19 PM IST
Highlights

டெல்லி கேபிடள்ஸ் அணியில் புதிதாக இணைந்துள்ள அஷ்வின் குறித்து அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் கருத்து தெரிவித்துள்ளார். 

ஐபிஎல்லில் இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வென்றிராத ஆர்சிபி, கிங்ஸ் லெவன், டெல்லி கேபிடள்ஸ் ஆகிய 3 அணிகளும் ஒவ்வொரு சீசனிலும் அதிரடியான மாற்றங்களை செய்துவருகின்றன. 

2018 மற்றும் 2019 ஆகிய கடந்த இரண்டு சீசன்களிலும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்த அஷ்வினை அந்த அணி கழட்டிவிட்டுள்ளது. டெல்லி கேபிடள்ஸ் அணியுடன் பரஸ்பர புரிதலுடன் வீரர்களை பரிமாற்றி கொண்டுள்ளது. அஷ்வினை டெல்லி அணிக்கு கொடுத்துவிட்டு, டெல்லி அணியிடமிருந்து ஜெகதீஷா சுஜித்தையும் கூடுதலாக ஒன்றரை கோடி ரூபாயையும் பெற்றுள்ளது. 

சிஎஸ்கே மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளில் ஆடிய அஷ்வின், அடுத்த சீசனில் டெல்லி கேபிடள்ஸ் அணிக்காக ஆடவுள்ளார். இந்நிலையில், டெல்லி அணியில் அஷ்வினை மிகுந்த நம்பிக்கையுடன் எடுத்தது குறித்தும் அஷ்வினால் எந்தமாதிரியான தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பது குறித்தும் அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் பேசியுள்ளார். 

அஷ்வின் குறித்து பேசிய பாண்டிங், அஷ்வின் எந்த அணியில் இருந்தாலும் அந்த அணியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவர். அதேபோலவே டெல்லி அணியிலும் அசத்துவார் என என்னால் உறுதியாக கூறமுடியும். எங்களது ஹோம் மைதானமான டெல்லி மைதானத்தின் ஆடுகளம் மந்தமான ஆடுகளம். அதனால் ஸ்பின்னிற்கு சாதகமானது. எனவே தனது புத்திசாலித்தனமான பவுலிங்கால், மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என நான் உறுதியாக நம்புகிறேன் என பாண்டிங் தெரிவித்துள்ளார். 

டெல்லி ஆடுகளம் ஸ்பின்னிற்கு சாதகமானது என்பதால், அனுபவமும் திறமையும் நிறைந்த ஒரு ஸ்பின்னர் அணிக்கு தேவை என்பதை உணர்ந்துதான் அஷ்வினை தட்டி தூக்கியுள்ளது டெல்லி அணி.
 

click me!