ஐபிஎல் லெஜண்ட்! அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் பியூஷ் சாவ்லா ஓய்வு!

Published : Jun 06, 2025, 03:55 PM IST
Piyush Chawla. (Photo: Piyush Chawla/ Instagram)

சுருக்கம்

அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக பியூஷ் சாவ்லா அறிவித்துள்ளார். கிரிக்கெட்டில் அவர் படைத்த சாதனைகள் குறித்து பார்ப்போம்.

Piyush Chawla Retirement From Cricket: இந்திய வீரர் பியூஷ் சாவ்லா அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். சமூக ஊடகப் பதிவு மூலம் ஓய்வு பெறுவதாக அறிவித்த சாவ்லா இனி பயிற்சியாளராக பணியாற்றத் தொடங்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார். சுமார் 13 ஆண்டுகளுக்கு முன்பு கடைசியாக சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. இந்த ஆண்டு ஐபிஎல் (IPL 2025) தொடரில் எந்த அணியிலும் இடம் கிடைக்கவில்லை.

பியூஷ் சாவ்லா ஓய்வு

இதனால் மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் என்ற இல்லாத நிலையில் 36 வயதான பியூஷ் சாவ்லா ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். பியூஷ் சாவ்லா இந்திய அணிக்காக 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 7 விக்கெட்டுகளும்,

25 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 32 விக்கெட்டுகளும், 7 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 4 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார். 2012 டிசம்பர் 22 அன்று இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டிக்குப் பிறகு, தேசிய அணிக்காக விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இருப்பினும், இவர் ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வந்தார்.

சச்சினுக்கு அடுத்தபடியாக சாதனை

கிங்ஸ் லெவன் பஞ்சாப் (Kings XI Punjab), கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (Kolkata Knight Riders), சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings), மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ளார். ஐபிஎல் போட்டிகளில் 192 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 192 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள பியூஸ் சாவ்லா மூன்றாவது அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய ஸ்பின்னர் என்ற பெருமையை பெற்றுளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கருக்கு (Sachin Tendulkar) அடுத்தபடியாக இளம் வயதில் அறிமுகமான இந்திய கிரிக்கெட் வீரர் சாவ்லா தான்.

உலகக்கோப்பைகளை வென்ற இந்திய அணியில் இடம்

2007 டி20 உலகக் கோப்பையை (2007 ICC World Twenty20) வென்ற இந்திய அணியின் முக்கிய வீரராக சாவ்லா இருந்தார். அதன்பிறகு 2011 ஒருநாள் உலகக் கோப்பையை (ICC Cricket World Cup 2011) வென்ற இந்திய அணியிலும் இடம் பெற்றிருந்தார். இவர் கூக்ளி பந்து வீச்சுக்குப் பெயர் பெற்றவர். தேசிய அணிக்காக அதிக போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு கிடைக்காவிட்டாலும், கிரிக்கெட் உலகில் பிரபலமானவர். அனைவரும் அவரது ஓய்வு வாழ்க்கைக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

உள்நாட்டு கிரிக்கெட்டிலும் சிறப்பான ஆட்டம்

உள்நாட்டு கிரிக்கெட்டில் குஜராத், உத்தரப் பிரதேசம் அணிகளுக்காக விளையாடியுள்ளார் சாவ்லா. ரஞ்சி கோப்பை உட்பட பல்வேறு உள்நாட்டு போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டுள்ளார். 137 முதல் தர போட்டிகளில் விளையாடி 446 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஆஸ்திரேலியாவில் முதல் சதம் விளாசிய 'ரன் மெஷின்' ஜோ ரூட்! ஆஷஸ் டெஸ்ட்டில் அசத்தல்!
IND vs SA 3வது ஓடிஐ..இந்திய அணியில் 2 மாற்றங்கள்.. தமிழக வீரர் நீக்கம்.. பிளேயிங் லெவன் இதோ!