
Kagiso Rabada Used Cocaine Drugs: தென்னாப்பிரிக்கா பாஸ்ட் பவுலர் கசிகோ ரபடா ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடினார். ஆனால் தொடரில் விளையாடிக் கொண்டிருந்தபோதே அவர் திடீரென பாதியில் இருந்து விலகி சொந்த நாட்டுக்கு சென்றார். தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் சொந்த ஊர் திரும்பியதாக முதலில் தகவல் வெளியாகி இருந்தது. பின்பு தான் ரபடா போதைப்பொருள் பயன்படுத்தியதால் அவரை தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வாரியத்தால் ஒரு மாதம் இடைநீக்கம் செய்தது தெரியவந்தது.
போதைப்பொருள் பயன்படுத்திய கசிகோ ரபடா
இந்த இடைநீக்கம் காலம் முடிந்த பிறகு ரபடா மீண்டும் இந்தியாவுக்கு வந்து குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடினார். போதைப்பொருள் சோதனையில் தோல்வியடைந்ததை ஒப்புக்கொண்டு தனது செயல்களுக்கு மன்னிப்பு கேட்டார் ரபடா. ஒரு பொழுது போக்குக்காக போதைப்பொருள் பயன்படுத்தியதை ஒப்புக்கொண்ட ரபடா, எது என்ன போதைப்பொருள்? என்பதை தெரிவிக்க மறுத்து விட்டார்.
மன்னிப்பு கேட்ட ரபடா
"நான் ஏமாற்றிய அனைவருக்கும் நான் மிகவும் வருந்துகிறேன். கிரிக்கெட் விளையாடும் பாக்கியத்தை நான் ஒருபோதும் சாதாரணமாக எடுத்துக்கொள்ள மாட்டேன். இந்த பாக்கியம் என்னை விட மிகப் பெரியது. "இது எனது தனிப்பட்ட விருப்பங்களை விட அதிகம்'' என்று ரபடா கூறியிருந்தார். இந்நிலையில், ஜனவரி மாதம் ககிசோ ரபாடா பயன்படுத்திய போதைப்பொருள் கோகைன் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கோகைன் பயன்படுத்தியது உறுதி
இது தொடர்பாக தென்னாப்பிரிக்க போதைப்பொருள் இல்லாத விளையாட்டு நிறுவனம் SAIDSவெளியிட்ட அறிக்கையில், ரபடா பயன்படுத்திய போதைப்பொருளில் கோகைனின் வளர்சிதை மாற்றமான பென்சாயிலெகோனைன் இருப்பதைக் கண்டறிந்ததாக தெரிவித்துள்ளது. கசிகோ ரபடா ஜூன் 11-15 வரை ஆஸ்திரேலியாவுடன் லார்ட்ஸில் நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியில் இடம்பிடித்துள்ளார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அணியில் ரபடா
ரபாடா பயன்படுத்திய போதைப்பொருள் செயல்திறனை மேம்படுத்துவதாகவும், பொழுதுபோக்குக்காக அல்லாமல் இருந்திருந்தால், அவர் கண்டிப்பாக நீண்ட காலத்திற்கு இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பார். இதனால் அவரால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாட முடியாமல் போயிருக்கும். ஆனாலும் போதைப்பொருள் பயன்படுத்தியதற்காக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின்போது ஆஸ்திரேலிய ரசிகர்கள் அவரை கிண்டல் செய்ய அதிக வாய்ப்புள்ளது.