வங்கதேச அணிக்கு எதிரான டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் ஓவரில் ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.
ஆஸ்திரேலியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்று போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் மிட்செல் மார்ஷ் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் விளையாடிய வங்கதேச அணியானது 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 140 ரன்கள் மட்டுமே எடுத்தது. தன்ஷித் அகமது மற்றும் லிட்டன் தாஸ் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், தன்ஷித் அகமது 0 ரன்னில் ஆட்டமிழக்க, அடுத்து நஜ்முல் ஹூசைன் ஷாண்டோ களமிறங்கினார். லிட்டன் தாஸ் 16 ரன்னில் வெளியேற, ரிஷத் ஹூசைன் 2 ரன்னில் ஆட்டமிழந்தார்.
ஷாண்டோ 41 ரன்னில் வெளியேற, தவ்ஹித் ஹிரிடோய் 40 ரன்களில் ஆட்டமிழந்தார். ஷாகிப் அல் ஹசன் 8 ரன்னிலும், மஹ்முதுல்லா 2 ரன்னிலும், மஹெடி ஹாசன் 0 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கடைசியாக தஸ்கின் அகமது மற்றும் தன்ஷிம் ஹசன் ஷாகிப் ஆகியோர் ஓரளவு ரன் எடுக்கவே வங்கதேசம் 140 ரன்கள் எடுத்தது.
போட்டியின் 18 ஆவது ஓவரை பேட் கம்மின்ஸ் வீசினார். அந்த ஓவரின் 17.5 ஆவது பந்தில் மஹ்முதுல்லா 2 ரன்னில் ஆட்டமிழக்க அடுத்த பந்திலேயே மஹெதி ஹாசன் 0 ரன்னில் ஆட்டமிழந்தார். கடைசியாக போட்டியின் 19.1ஆவது ஓவரில் தவ்ஹித் ஹிரிடோய் 40 ரன்னில் பேட் கம்மின்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார்.
இதன் மூலமாக இந்த தொடரில் ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றிய முதல் ஆஸ்திரேலிய வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார். அதுமட்டுமின்றி டி20 உலகக் கோப்பை தொடரில் ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றியுள்ளார். இதற்கு முன்னதாக 17 ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றி சாதனை படைத்திருந்தார்.
வங்கதேச அணிக்கு எதிராக நடைபெற்ற டி20 போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 17 ஆண்டுகளுக்கு பிறகு மற்றொரு ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் டி20 போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து வரலாற்று சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
PAT CUMMINS BECOMES THE FIRST AUSTRALIAN TO TAKE MEN'S T20I WC HAT-TRICK AFTER 17 LONG YEARS. 🐐 pic.twitter.com/rt9rC5hImA
— Johns. (@CricCrazyJohns)