ஆஸ்திரேலிய ஒருநாள் அணியின் புதிய கேப்டன் பாட் கம்மின்ஸ்..! வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு

By karthikeyan VFirst Published Oct 18, 2022, 10:01 AM IST
Highlights

ஆஸ்திரேலிய ஒருநாள் அணியின் புதிய கேப்டனாக பாட் கம்மின்ஸ் அறிவிக்கப்பட்டுள்ளார்.
 

ஆஸ்திரேலிய ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டனாக கடந்த 2018ம் ஆண்டிலிருந்து இருந்துவந்த ஆரோன் ஃபின்ச், அண்மையில் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்தார். 

டி20 உலக கோப்பையில் ஆரோன் ஃபின்ச் கேப்டன்சியில் தான் ஆஸ்திரேலிய அணி ஆடுகிறது. ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஃபின்ச் ஓய்வு அறிவித்ததையடுத்து, புதிய கேப்டன் யார் என்ற கேள்வி நிலவிவந்தது.

இதையும் படிங்க - T20 World Cup:ஆஸி.,க்கு எதிரான பயிற்சி போட்டியில் ஷமிக்கு கடைசி ஒருஓவரை மட்டும் கொடுத்தது ஏன்? ரோஹித் விளக்கம்

டெஸ்ட் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸையே ஒருநாள் அணிக்கும் கேப்டனாக நியமிக்கலாம் என்று ஆரோன் ஃபின்ச்சே கூறியிருந்தார். ஆனால் கம்மின்ஸ் டெஸ்ட் கேப்டன்சியில் மட்டும் கவனம் செலுத்தவுள்ளதாகவும், வெள்ளைப்பந்து கிரிக்கெட் அணிகளின் கேப்டன்சியை ஏற்க அவர் ஆர்வம் காட்டவில்லை என்றும் தகவல் வெளியானது.

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் வாழ்நாள் கேப்டன்சி தடை பெற்ற வார்னர், தன் மீதான தடையை நீக்குவது குறித்து கிரிக்கெட் ஆஸ்திரேலியாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். எனவே அவருக்கும் கேப்டன்சி வாய்ப்பு இருந்ததாக பார்க்கப்பட்டது.

ஆனால் டெஸ்ட் கேப்டன் பாட் கம்மின்ஸே ஆஸ்திரேலிய ஒருநாள் அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். அடுத்த ஆண்டு ஒருநாள் உலக கோப்பை இந்தியாவில் நடக்கவுள்ள நிலையில், அந்த உலக கோப்பைக்காக கம்மின்ஸ் தலைமையில் ஆஸ்திரேலிய அணி தயாராகவுள்ளது.

இதையும் படிங்க - லாங் ஆனில் விராட் கோலியின் ஒன் ஹேண்ட் கேட்ச்சை பார்த்து மிரண்டுபோன ஆஸ்திரேலிய வீரர்கள்..! வைரல் வீடியோ

மிகச்சிறந்த ஆல்ரவுண்டரான பாட் கம்மின்ஸ் 73 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் ஆடி 119 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்; 324 ரன்கள் அடித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் 43 டெஸ்ட் மற்றும் 46 டி20 போட்டிகளிலும் ஆடியுள்ளார்.

click me!