ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டனாகி வரலாற்று சாதனை படைத்த Pat Cummins..! துணை கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்

By karthikeyan VFirst Published Nov 26, 2021, 10:42 AM IST
Highlights

ஆஸ்திரேலியா டெஸ்ட் அணியின் கேப்டனாக பாட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
 

2018ல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக இருந்த ஸ்டீவ் ஸ்மித் தடை பெற்றார். இதையடுத்து ஆஸ்திரேலியா டெஸ்ட் அணியின் கேப்டனாக டிம் பெய்னும், ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டனாக ஆரோன் ஃபின்ச்சும் நியமிக்கப்பட்டனர்.

கடந்த மூன்றரை ஆண்டுகளாக ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டனாக இருந்துவந்தார் டிம் பெய்ன். இந்நிலையில், அவர் சக பெண் ஊழியர் ஒருவருக்கு 2017ல் ஆபாசமாக மெசேஜ் செய்த விவகாரம் அம்பலமானதையடுத்து, ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக இருக்கும் தகுதியை இழந்துவிட்டதாக கூறி கேப்டன்சியிலிருந்து விலகினார் டிம் பெய்ன்.

இந்நிலையில், ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டனாக, துணை கேப்டனாக இருந்த பாட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வரலாற்றில், டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட முதல் ஃபாஸ்ட் பவுலர் என்ற சாதனையை படைத்தார் பாட் கம்மின்ஸ்.  துணை கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளார்.

 பாட் கம்மின்ஸ் 34 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் ஆடி 164 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். 708 ரன்களையும் அடித்திருக்கிறார்.
 

click me!