Bangladesh vs Pakistan முதல் டெஸ்ட் போட்டிக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு

Published : Nov 25, 2021, 10:19 PM IST
Bangladesh vs Pakistan முதல் டெஸ்ட் போட்டிக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு

சுருக்கம்

வங்கதேசத்துக்கு எதிராக நவம்பர் 26ம் தேதி தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டிக்கான 12 வீரர்களை கொண்ட பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.  

பாகிஸ்தான் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணத்தில் செய்து கிரிக்கெட் தொடரில் ஆடிவருகிறது. 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் வங்கதேசத்தை ஒயிட்வாஷ் செய்து 3-0 என பாகிஸ்தான் அணி டி20 தொடரை வென்றது.

அதைத்தொடர்ந்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடக்கிறது. முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 26ம் தேதி தொடங்குகிறது.

டி20 தொடரில் 3 போட்டிகளில் சேர்த்தே மொத்தமாக வெறும் 27 ரன்கள் மட்டுமே அடித்த பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமின் ஃபார்ம் பாகிஸ்தானுக்கு கவலையளிக்கும் விதமாக அமைந்துள்ளது. அவர் நன்றாக ஆடினால் தான் பாகிஸ்தான் அணி ஜெயிக்கமுடியும்.

இந்நிலையில், முதல் டெஸ்ட் போட்டிக்கான 12 வீரர்களை கொண்ட பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பாபர் அசாம் தலைமையிலான, முகமது ரிஸ்வானை துணை கேப்டனாக கொண்ட பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான பாகிஸ்தான் அணி:

பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான் (துணை கேப்டன்), அப்துல்லா ஷாஃபிக், அபித் அலி, அசார் அலி, ஃபஹீம் அஷ்ரஃப், ஃபவாத் ஆலம், ஹசன் அலி, இமாம் உல் ஹக், நௌமன் அலி, சஜித் கான், ஷாஹீன் அஃப்ரிடி.
 

PREV
click me!

Recommended Stories

யார்க்கர் மன்னன் ஜஸ்பிரித் பும்ரா வரலாற்று சாதனை..! மற்ற பவுலர்கள் நினைச்சு கூட பார்க்க முடியாது!
IND VS SA 1st T20: தென்னாப்பிரிக்காவை வெறும் 74 ரன்னில் சுருட்டி வீசிய இந்தியா.. மெகா வெற்றி!