IPL 2022 நோ தேங்க்ஸ்.. போதும்ப்பா நீங்க பண்ணதுலாம்! SRH ரசிகரின் விருப்பத்துக்கு உடனடியா மறுப்பு கூறிய வார்னர்

By karthikeyan VFirst Published Nov 25, 2021, 9:30 PM IST
Highlights

ஐபிஎல் 15வது சீசனில் டேவிட் வார்னர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு கேப்டன்சி செய்ய வேண்டும் என்ற ரசிகரின் விருப்பத்துக்கு உடனடியாக மறுப்பு தெரிவித்தார்  டேவிட் வார்னர்.
 

ஐபிஎல்லில் 2014ம் ஆண்டிலிருந்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் ஆடிவந்த ஆஸ்திரேலிய அதிரடி வீரரான டேவிட் வார்னர், 2016 ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ் அணிக்கு ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்தார். சன்ரைசர்ஸ் அணிக்கு தனது அபாரமான பேட்டிங் மற்றும் கேப்டன்சியின் மூலம் ஏராளமான வெற்றிகளை பெற்றுக்கொடுத்தவர் வார்னர்.

ஆனால் வார்னர் அணிக்கு அளித்த பங்களிப்பை எல்லாம் மறந்து, அவர் ஃபார்மில் இல்லாத காரணத்தால் ஐபிஎல் 14வது சீசனின் 2ம் பாதியில் ஒன்றிரண்டு போட்டிகளுக்கு பின்னர் அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டார் வார்னர். கேப்டன்சி கேன் வில்லியம்சனிடம் ஒப்படைக்கப்பட்டு, வார்னருக்கு ஆடும் லெவனில் கூட இடம் வழங்கப்படவில்லை. வார்னர் மாதிரியான ஒரு கிரேட் பிளேயரை ஃபார்மை காரணம் காட்டி ஓரங்கட்டியது ரசிகர்கள் மட்டுமல்லாது முன்னாள் வீரர்களுக்கே பெரும் அதிர்ச்சியாக இருந்தது.

வார்னரின் மோசமான ஃபார்ம் டி20 உலக கோப்பையில் ஆஸ்திரேலிய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்துமோ என அந்த அணி கவலைப்பட்ட நிலையில், டி20 உலக கோப்பையில் 7 போட்டிகளில் 3 அரைசதங்கள் மற்றும் 48.16 என்ற சராசரியுடன் 289 ரன்களை குவித்து தொடர் நாயகன் விருதையும் வென்றார் வார்னர். 

அரையிறுதியில் பாகிஸ்தானுக்கு எதிராக 49 ரன்கள், இறுதிப்போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக 173 ரன்கள் என்ற இலக்கை விரட்டும்போது சிறப்பாக ஆடி அரைசதம் அடித்து 53 ரன்கள் என குவித்த வார்னர், ஆஸ்திரேலிய அணி முதல் முறையாக டி20 உலக கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக திகழ்ந்தார்.

தன்னை ஓரங்கட்டிய சன்ரைசர்ஸ் அணியிலிருந்து வார்னர் வெளிவந்துவிட்ட நிலையில், அடுத்த  ஐபிஎல் சீசனில் புதிதாக 2 அணிகள் (அகமதாபாத், லக்னோ) சேர்ந்திருப்பதால், வார்னரை எந்த அணி ஏலத்தில் எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் உள்ளது. விராட் கோலி கேப்டன்சியிலிருந்து விலகிவிட்டதால், புதிய கேப்டனை தேடிவரும் ஆர்சிபி அணியும் வார்னரை எடுப்பதற்கான வாய்ப்பிருப்பதாக பார்க்கப்படுகிறது.

ஆனால் சன்ரைசர்ஸ் அணி தன்னை ஒதுக்கியதால், சன்ரைசர்ஸ் அணியை வெறுத்தேவிட்டார் வார்னர். அடுத்த சீசனில் அவர் புதிய அணியில் புதிய பயணத்தை எதிர்நோக்கியிருக்கும் நிலையில், சன்ரைசர்ஸ் ரசிகர் ஒருவர், இன்ஸ்டாகிராமில், சன்ரைசர்ஸ் அணியின் ஹெட்கோச் டாம் மூடி; கேப்டன் டேவிட் வார்னர் என தனது விருப்பத்தை பதிவு செய்திருந்தார்.

அதைக்கண்ட வார்னர், No Thanks என பதிலளித்துவிட்டார். நீங்க கொடுத்த மரியாதை போதும்டா சாமி.. என்னைய விடுங்க என்கிற ரீதியில் உடனடியாக நோ தேங்க்ஸ் என பதிவிட்டுவிட்டார் வார்னர்.
 

click me!