இந்திய அணியின் புதிய பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் பயிற்சியாளர்கள் இவர்கள் தான்..!

By karthikeyan VFirst Published Nov 11, 2021, 10:34 PM IST
Highlights

இந்திய அணியின் புதிய பவுலிங் மற்றும் ஃபீல்டிங் பயிற்சியாளர்களாக பராஸ் மஹாம்ப்ரே மற்றும் டி.திலீப் நியமிக்கப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
 

இந்திய அணி பயிற்சியாளர்களின் பதவிக்காலம் முடிவடைந்ததையடுத்து, புதிய பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டுவருகின்றனர். 2017ம் ஆண்டிலிருந்து 4 ஆண்டுகளாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் டி20 உலக கோப்பையுடன் முடிவடைந்த நிலையில், அடுத்த தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார்.

நியூசிலாந்துக்கு எதிராக இந்தியாவில் நடக்கவுள்ள கிரிக்கெட் தொடர் வரும் 17ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், அந்த தொடரிலிருந்தே ராகுல் டிராவிட் தனது பணியை தொடங்கவுள்ளார்.

அதேபோல பவுலிங் பயிற்சியாளர் பரத் அருண், பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் மற்றும் ஃபீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகிய அனைவரின் பதவிக்காலமும் முடிவடைந்துவிட்ட நிலையில், பேட்டிங் பயிற்சியாளர் பதவிக்கு மீண்டும் விண்ணப்பித்துள்ள விக்ரம் ரத்தோர், அவரது பொறுப்பில் நீடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பேட்டிங் பயிற்சியாளர், பவுலிங் பயிற்சியாளர் மற்றும் ஃபீல்டிங் பயிற்சியாளர் ஆகிய பொறுப்புகளுக்கான நேர்காணலை, கிரிக்கெட் ஆலோசனைக் குழு நடத்தியது. ஆர்பி சிங் மற்றும் சுலக்‌ஷனா நாயக் அடங்கிய கிரிக்கெட் ஆலோசனைக்குழு பயிற்சியாளர்கள் பொறுப்புக்கு விண்ணப்பித்தவர்களிடம் நேர்காணல் நடத்தியது.

இதையடுத்து, பவுலிங் பயிற்சியாளராக பராஸ் மஹாம்ப்ரே மற்றும் ஃபீல்டிங் பயிற்சியாளராக டி திலீப் ஆகிய இருவரும் நியமிக்கப்படுவது உறுதியாகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பிசிசிஐ விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பராஸ் மஹாம்ப்ரே சர்வதேச கிரிக்கெட்டில் பெரிய அனுபவம் இல்லாதவர். இவர் வெறும் 2 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே இந்திய அணிக்காக ஆடியுள்ளார். 

click me!