இலங்கைக்கு எதிரான சூப்பர் 4 சுற்று போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றின் 5ஆவது போட்டி இன்று நடக்கிறது. பிற்பகல் 3 மணிக்கு நடக்க வேண்டிய போட்டியானது கனமழை காரணமாக இதுவரையில் நடக்கவில்லை. இந்த நிலையில், மழை நின்றதைத் தொடர்ந்து தற்போது டாஸ் போடப்பட்டுள்ளது. இதில், டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பேட்டிங் தேர்வு செய்துள்ளார். மேலும், பாகிஸ்தான் அணியில் காயம் காரணமாக அகா சல்மான் இடம் பெறவில்லை. சவுத் ஷகீலுக்கு உடல்நிலை சரியில்லாத நிலையில் அவரும் இடம் பெறவில்லை.
Sri Lanka vs Pakistan: நடையை கட்டுமா பாகிஸ்தான்? ரன் ரேட் யாருக்கு சாதகம்?
இமாம் உல் ஹக் நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக அப்துல்லா ஷாஃபிக் இடம் பெற்றுள்ளார். ஹரிஷ் ராஃப், நசீம் ஷா இடம் பெறாத நிலையில், அவர்களுக்குப் பதிலாக முகமது ஹரிஷ், முகமது நவாஸ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், பஹீம் அஷ்ரப்பிற்குப் பதிலாக முகமது வாசீம் ஜூனியர் இடம் பெற்றுள்ளார். மேலும், ஜமான் கான் இந்தப் போட்டியில் அறிமுகமாகிறார்.
இலங்கை:
பதும் நிசாங்கா, குசல் ஜனித் பெரேரா, குசால் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்), சதீரா சமரவிக்ரமா, சரித் அசலங்கா, தனஞ்சயா டி சில்வா, தசுன் ஷனாகா (கேப்டன்), துனித் வெல்லலகே, மஹீஷ் தீக்ஷனா, பிரமோத் மதுஷன், மதீஷா பதிரனா
பாகிஸ்தான்:
ஃபஹர் ஜமான், அப்துல்லா ஷாஃபிக், பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), முகமது ஹரிஷ், இப்திகார் அகமது, ஷதாப் கான், முகமது நவாஸ், ஷாஹீன் அஃப்ரிடி, முகமது வாசீம் ஜூனியர், ஜமான் கான்.
PAK vs SL, Colombo Rain: கனமழையால் டாஸ் போடுவதில் சிக்கல்: பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்கு முன்னேறுமா?
இந்தியாவுடனான போட்டியில் அடி வாங்கிய நிலையில், தற்போது பாகிஸ்தான் அணியில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி அப்துல்லா ஷாஃபிக், முகமது ஹரிஷ், முகமது நவாஸ், முகமது வாசீம் ஜூனியர், ஜமான் கான் என்று 5 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதே போன்று இலங்கை அணியிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, திமுத் கருணாரத்னே மற்றும் கசுன் ரஜிதா ஆகியோர் நீக்கப்பட்டு அவர்களுக்குப் பதிலாக, குசல் ஜனித் பெரேரா, பிரமோத் மதுஷன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். கிட்டத்தட்ட 2 மணிநேரங்களாக கனமழை பெய்த நிலையில் போட்டியானது 5 ஓவர்கள் குறைக்கப்பட்டு 45 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடக்கிறது.
சிவகாசி பட்டாசு மாதிரி வெடித்து தள்ளிய பென் ஸ்டோக்ஸ்: ஒருநாள் கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை!